Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, 22 February 2014

டைரக்டர் பி.வாசு - மறுபடியும் பேட்டி....?

நவ்யா நாயர் மீண்டும் நடிக்க வருகிறார். அவர் ஒரு கன்னட படத்தின் மூலம் திரையுலகுக்கு மறுபிரவேசம் செய்கிறார்.

நவ்யா நாயர்

நடிகை நவ்யா நாயர், கேரளாவை சேர்ந்தவர். மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர், ‘அழகிய தீயே’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்தார்.

சில வருடங்களுக்கு முன்பு அவர், பெங்களூரில் வசிக்கும் ஒரு சாப்ட்வேர் என்ஜினீயரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

மீண்டும் நடிப்பு

பெங்களூரில் கணவர்–குழந்தையுடன் குடும்பம் நடத்தி வந்த நவ்யா நாயர், மீண்டும் நடிக்க வருகிறார். ஒரு கன்னட படத்தின் மூலம் திரையுலகுக்கு அவர் மறுபிரவேசம் செய்கிறார்.

கேரளாவில் வெற்றி பெற்ற ‘த்ரிஷ்யம்’ என்ற மலையாள படத்தின் ‘ரீமேக்’ (மறு ஆக்கம்) இது. இதே படத்தின் தமிழ் பதிப்பில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். கன்னட படத்தில், ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். ரவிச்சந்திரன் ஜோடியாக நவ்யா நாயர் நடிக்கிறார். இந்த படத்தை பி.வாசு டைரக்டு செய்கிறார்.

பேட்டி

 டைரக்டர் பி.வாசு கூறியதாவது:–

‘‘த்ரிஷ்யம் (மலையாளம்) படத்தில், மோகன்லால் ஜோடியாக மீனா மிக சிறப்பாக நடித்து இருந்தார். அவரையே கன்னட படத்திலும் நடிக்க வைக்கலாம் என்று முதலில் திட்டமிட்டு இருந்தேன்.

ஆனால், ‘த்ரிஷ்யம்’ படத்தின் தெலுங்கு பதிப்பில் மீனா நடிப்பதால், அவரைப் போன்ற குடும்பப்பாங்கான கதாநாயகி ஒருவர் தேவைப்பட்டார். அதற்கு நவ்யா நாயர் பொருத்தமாக இருப்பார்.’’

இவ்வாறு டைரக்டர் பி.வாசு கூறினார்.

0 comments:

Post a Comment