Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, 22 February 2014

ஐஸ்வர்யாராயின் அழகின் ரகசியம் இதுதானா?

அனைவருக்குமே அழகில் அதிக ஆர்வம் இருக்கும். அதிலும் உலக அழகியாக இருந்த ஐஸ்வர்யா ராயின் அழகின் இரகசியத்தை தெரிந்து கொள்ள ஆவலோடு இருப்போம். ஏனெனில் அவர் என்ன தான் வயதானாலும், இன்னும் அவரது அழகில் மட்டும் எந்த ஒரு குறைச்சலும் இல்லை. சொல்லப்போனால் நிறைய பேரின் மனதில் அழியா இடம் பெற்றுள்ளார். மேலும் அவருக்குப் பின்னர் எவ்வளவு தான் உலக அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், ஐஸ்வர்ராய் போன்று யாரும் இல்லை. அத்தகைய ஐஸ்வர்யா தனது அழகால் அனைவரையும் மயக்கிவிட்டார்.

மேலும் அவர் அபிஷேக் பச்சனை மணந்து, குழந்தையை பெற்றப் பின்னரும் அவர் அழகில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. அதிலும் தற்போது தான் அவரது பிறந்த நாள் வந்தது. சொன்னால் நம்ப மாட்டீங்க, அவருக்கு இது 39-வது பிறந்தநாள். இதைச் சொன்னால் நம்பமுடியாத அளவில் இருப்பதற்கு அவர் என்ன தான் செய்கிறார் என்று நிறைய பேர் அதை தெரிந்து கொள்ள எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவருடைய அழகின் இரகசியம் இயற்கை அழகுப் பொருட்கள் தான். நம்ப முடியவில்லையா? ஆம், இவர் எப்போதும் இயற்கைப் பொருட்களை தான் பயன்படுத்துவாராம். இப்போது ஐஸ்வர்யா ராயின் அழகின் இரகசியங்களைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


தண்ணீர்

உலக அழகியாக இருந்த ஐஸ்வர்யா ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 டம்ளர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் உடலில் உள்ள அனைத்து டாக்ஸின்களும் வெளியேறி, வயதானாலும் இளமையுடன் காட்சியளிக்கிறார்.

கடலை மாவு

ஐஸ்வர்யாவிற்கு பிடித்த இயற்கையான அழகுப் பொருட்களில் ஒன்று தான் கடலை மாவு. அதிலும் இந்த கடலை மாவை பாலுடன் கலந்து ஃபேஸ் பேக் செய்வதால், சருமத்தின் நிறம் சற்று கூடும். இதைத் தான் அடிக்கடி ஐஸ்வர்யா ராய் செய்வாராம்.

வெள்ளரிக்காய்

சொன்னால் நம்பமாட்டீங்க, ஐஸ்வர்யா எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பதற்கு காரணம் வெள்ளரிக்காய் என்று அவர் சொல்கிறார். ஏனெனில் வெள்ளரிக்காயை வெட்டி சருமத்தில் சிறிது நேரம் வைத்தால், சருமம் ரிலாக்ஸ் ஆகிவிடும். அதிலும் இதை செய்தால், எவ்வளவு மேக்-கப் செய்தாலும், சருமம் நன்கு பொலிவோடு, எந்த ஒரு தடையுமின்றி சுவாசிக்கும்.

பாசிட்டிவ் எண்ணங்கள்

எப்போதும் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருப்பதும் ஒரு வகையில் இவரது அழகின் இரகசியம் என்றும் சொல்கிறார். மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் பாசிட்டிவ் எண்ணங்களோடு தான் செயல்படுவதாகவும் சொல்கிறார்.

தேங்காய் எண்ணெய்

பட்டுப் போன்ற கூந்தலை ஐஸ்வர்யா பெறுவதற்கு அடிக்கடி தேங்காய் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வது தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.


போதிய தூக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை

தன் அழகிய கண்ணால் ஈர்க்கும் ஐஸ்வர்யா, இத்தகைய கண்களை பெறுவதற்கு என்று எந்த ஒரு சிகிச்சையும் செய்யவில்லை. போதிய தூக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தான் இவரது மின்னும் கண்ணின் இரகசியம்.

0 comments:

Post a Comment