Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, 22 February 2014

சென்னையில் ஸ்வீடன் திரைப்பட விழா!

சென்னையில் சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்தும் சினி அப்ரிசியேஷன் அமைப்பும், டில்லியில் உள்ள ஸ்வீடன் நாட்டு தூதரகமும் இணைந்து சென்னையில் ஸ்வீடன் திரைப்பட விழாவை நடத்துகிறது.


ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடக்கும் இந்த விழாவில் 9 ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.


பிகைண்டு புளூ ஸ்கைஸ், ஐஸ் டிராகன், தி லாஸ்ட் சென்டென்ஸ, அவ்லான், பாமி ஆகியவை முக்கியமான திரைப்படங்கள்.


வருகிற 24ந் தேதி தொடங்கி 27ந் தேதி வரை நடக்கிறது. 24ந் தேதி நடக்கும் விழாவில் ஸ்வீடன் நாட்டின் தூதர் ஹெரால்டு சாண்ட்பர்க் துவக்கி வைக்கிறார்.


சென்னையில் உள்ள துணை தூதர் அருண் வாசு, நடிகை பூர்ணிமா பாக்யராஜ் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். அனுமதி இலவசம். அனைவரும் மேற்கண்ட நாட்களில் படங்களை பார்க்கலாம்.

0 comments:

Post a Comment