Pages

Subscribe:

Ads 468x60px

Wednesday, 19 February 2014

அஜித்துடன் அதிக பழக்கம் இல்லை: உதயநிதி ஸ்டாலின்!

அஜித்துடன் தனக்கு அதிக பழக்கம் இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து உள்ளார்.


அதில், தன்னுடைய தயாரிப்பு அனுபவம் குறித்து குறிப்பிட்டபோது, நான் தயாரிப்பாளராக மாறியதற்கு காரணமே விஜய்தான். விஜய் கால்ஷீட் கொடுக்காவிட்டால் படமே தயாரிக்க முன்வந்திருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.


கில்லி படம் பார்த்தபிறகு  நான் தயாரிக்கும் முதல் படம் விஜய் படமாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, விஜய் பிசியாக இருந்தபோதிலு, காத்திருந்து அடம்பிடித்து அவரிடம் கால்ஷீட் வாங்கி ‘குருவி’ படத்தை தயாரித்ததாக கூறினார். தயாரிப்பாளர் என்ற முறையில் நான் முதலில் தேர்வு செய்யும் ஹீரோ விஜய்தான். இரண்டாவது சூர்யா, அடுத்துதான் அஜித். தனுஷ், சிம்பு படங்களையும் தயாரிக்க ஆசை என்று அப்போது கூறினார்.


மேலும், அஜித்துடன் தனக்கு அதிக பழக்கம் இல்லை என கூறி அஜித்தை கூறிப்பிட்டிருக்கிறார் உதயநிதி.

0 comments:

Post a Comment