துப்பாக்கி படத்தின் வெற்றிக் கூட்டணியான இளைய தளபதி விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கிவரும் புதிய படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்துவருகிறது.
இதனால் இப்படத்தின் டைட்டில் குறித்து ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதே சமயம் இப்படத்திற்குப் பரிசீலிக்கப்பட்டுவரும் தலைப்புகளைக் குறித்த செய்திகள் பரபரப்பூட்டிவருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்திற்கு “வாள்” என்ற தலைப்பு பரிசீலனையில் இருந்துவருவதாகக் கூறப்பட்டது. தற்பொழுது “தீரன்” என்ற
தலைப்பு பரிசீலிக்கப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் உறுதியான டைட்டிலை அறிய ரசிகர்கள் பேரார்வத்துடன் காத்திருக்கின்றனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றிவரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். சமந்தா ஹீரோயினாக நடித்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்கத்தாவில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்புகள் பின்னர் சென்னை விமான நிலையத்திலும் படமாக்கப்பட்டன. வருகிற தீபாவளி ரிலீசாக இப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment