ரம்மி படத்திற்குப் பிறகு கௌரவத் தோற்றத்தில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருந்த விஜய் சேதுபதி மீண்டும் கௌரவ வேடத்தில்
நடிக்கவுள்ளார்.
தனது திரைப்பயணத்தில் பீட்சா படத்தின் மூலம் மாபெரும் மைல்கல்லை நிறுவிய இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் ஜிகர்தண்டா படத்தில் கௌரவ வேடத்தில் அவர் நடிக்கவுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் லக்ஷ்மிமேனன் இணைந்து நடித்துவரும் திரைப்படம் ஜிகர்தண்டா. குரூப்ஸ் கம்பெனி மற்றும் ஸ்ரீ மீனாட்சி கிரியேசன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
தற்பொழுது விஜய் சேதுபதியும் கௌரவ வேடத்தில் நடிக்கவுள்ளதால் இப்படத்தினைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறிவருகிறது.
சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு நடிகராகவே ( விஜய் சேதுபதியாகவே) தோன்றவுள்ளதாகவும், சித்தார்த் விஜய் சேதுபதியை இயக்குவது போன்ற காட்சி படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment