ராஜா ராணி திரைப்படத்தைத் தயாரித்த பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ மற்றும் தி நெக்ஸ்ட் பிக் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் புதிய படமான குக்கூ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியாகியது.
இயக்குனர் லிங்குசாமியின் இயக்கிய பீமா மற்றும் பையா ஆகிய படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் மாற்றுத் திறனாளிகளுக்கிடையேயான அழகான காதல் கதையினை மையப்படுத்து உணர்வுப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லரில் வரும் ”நல்லா இருக்கிற ஆம்பள எங்க வேணாலும் இருக்கறான், மனசு இருக்கிற ஆம்பள எல்லா எடத்திலயுமா இருக்கறான்?” என்ற வசனம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது.
அட்டக்கத்தி தினேஷ் மற்றும் மாளவிகா இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கெனவே மக்களிடம் பிரபலமடைந்திருப்பதைப் போலவே, இப்படத்தின் ட்ரெய்லரும் அழகான காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

0 comments:
Post a Comment