கவுதம் மேனன் படத்தில் அஜீத்தும் அனுஷ்காவும் முதல் முறையாக ஜோடி சேரப் போவதாக எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்க, 'இருங்க... அவசரப்பட வேணாம்.. அஜீத்துக்கு வேறு ஜோடி தேடிக்கிட்டிருக்கோம்," என்று அதே யூனிட்டிலிருந்து அவசரக் குரல் கேட்கிறது.
மார்ச் மூன்றாம் வாரத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்கவிருக்கிறது. ஆனால் அதற்குள் அனுஷ்காவால் வரமுடியுமா என்று தெரியவில்லை. காரணம் அவர் ருத்ரமா தேவி, பாஹூபலி ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார்.
இரண்டுமே சரித்திரப் படங்கள். நல்ல சம்பளம் வேறு. அன்லிமிடட் கால்ஷீட்டை அள்ளி வழங்கியிருக்கிறார் இரு படங்களுக்கும். 'ருத்ரம்மா தேவி', 'பாகுபாலி' படங்களின் சண்டைப் பயிற்சியில் கவனம் செலுத்துவதால் அனுஷ்கா இன்னும் கொஞ்சம்
ஆனால், ஹீரோயின் அஜித்தை விட படத்தில் கொஞ்சம் இளமையாகத் தெரிய வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார் இயக்குநர் (அஜீத் இந்தப் படத்தில் டை வேறு அடிக்கிறார்... !). இத்தனை சிக்கல் இருப்பதால் அனுஷ்கா இப்படத்தில் நடிப்பாரா?
என்ற கேள்விக்குறி எழுந்துவிட்டது. 'வீரம்' படத்தில் அஜித்துடன் நடிக்க அனுஷ்காவைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தனர். கால்ஷீட் பிரச்னையால் அனுஷ்கா நடிக்க முடியவில்லை. இப்போதும் அதே சிக்கல். எதற்கும் இருக்கட்டுமே என இன்னொரு ஹீரோயினைத் தேடி வருகிறார்கள்.
0 comments:
Post a Comment