Pages

Subscribe:

Ads 468x60px

Wednesday, 19 February 2014

சிவகார்த்திகேயன் - தனுஷ் ... அப்படி என்ன உறவுதான் இவர்களுக்குள்!

தனுஷ் மார்க்கெட்டில் இருக்கும்போதே அடுத்த தனுஷ் நான்தான் என்று ஒரே மேடையில் தனுஷ் முன்னிலையிலேயே மார்தட்டினார் சிவகார்த்திகேயன்.


அதைப்பார்த்து ஆடிப்போனார் தனுஷ். அடுத்து அவர் மைக் முன்பு பேசவந்தபோது, என் இடத்தையெல்லாம் இப்போதைக்கு யாருக்கும் விட்டுத்தர மாட்டேன். இன்னும் 10 ஆண்டுகளுக்கு பிறகு வேண்டுமானால் அதைப்பற்றி யோசிக்கலாம் என்று சிவகார்த்திகேயனுக்கு பதிலடி கொடுத்தார்.


ஆனபோதும், சிவகார்த்திகேயனை அந்த இடத்தில் விட்டுக்கொடுக்கவில்லை தனுஷ், என் தம்பி, தம்பி என்று வார்த்தைக்கு வார்த்தை சிவகார்த்திகேயனை குறிப்பிட்டு பெருமைப்படுத்தினார். அதுமட்டுமின்றி அடுத்தடுத்து தான் தயாரிக்கும் படங்களிலும் அவரை நடிக்க வைத்து வளர்த்து விட்டு வருகிறார்.


இதனால் சிம்பு எப்படி தான் அஜீத்தின் ரசிகன் என்று சொல்லிக்கொண்டு வருவதோடு, அவரது அடுத்து வாரிசு நான்தான் என்று கூறிக்கெணர்டு வருகிறாரோ, அதேபோல், தனுஷின் இதயத்தில் தனக்கு தனி இடம் உள்ளது என்பதால் சிவகார்த்திகேயனும் தனுஷின் அடுத்த வாரிசு நான்தான் என்று கம்பீரமாக சொல்கிறார். அதோடு, மற்றவர்களெல்லாம் எப்படியோ, ஆனால் தனுஷை பொறுத்தமட்டில் எனது ஒவ்வொரு அசைவுகளையும் துல்லியமாக கவனித்துக் கொண்டிருக்கிறார்.


நான் செய்கிற நிறைகுறைகளை நேரடியாக சொல்லி எனக்கு நல்லதொரு நடிப்பு ஆசானாகவும் இருந்து வருகிறார் என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார்.

0 comments:

Post a Comment