காதலுக்காக மேனஜர்களை நீக்கிய அதர்வா?
நடிகர் அதர்வா தனது அப்பாக்காலத்தில் இருந்து தற்போது வரை மேனஜராக வேலைபார்த்து வந்த சம்பத்தை நீக்கியுள்ளார். மேலும் அவருடன் பணியாற்றி வந்த வெங்கட் என்பவரையும் நீக்கியுள்ளார்.
இதற்கான காரணம் குறித்து கோடம்பாக்கத்தில் வரும் தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
அதர்வாவுக்கும் ப்ரியா ஆனந்துக்கும் காதல்வயப்பட்டிருப்பதாக கோடம்பாக்க வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில் மேனஜர்கள் இரண்டு பேரும் நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.
சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மேனேஜராக இருந்தவரை மேனேஜராக அதர்வாக நியமித்துளளார்.
அவர் வந்த ராசியும அவரது விவேகமான செயல்பாடுகளும் தன்னை அடுத்த லெவலுக்கு கொண்டுபோகும் என்று நம்புகிறாராம் அதர்வா.
0 comments:
Post a Comment