Pages

Subscribe:

Ads 468x60px

Tuesday, 18 February 2014

வாலு படத்திற்காக ஒரே பைக்கில் வந்த அஜித்-விஜய்!

சிம்பு தற்போது நடித்து வரும் படங்களில், ’வாலு’ திரைப்படமும் அடங்கும். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க, இவர்களுடன் சந்தானம், விடிவி கணேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.


இந்த படத்தை சிம்புவின் நண்பர் விஜய்சந்தர் இயக்கிவருகிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளதாம். இதனிடையே படத்தின் ஆடியோ காதலர் தினமான ஃபிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது- ஆனால், படத்தின் ஒரே ஒரு பாடலை மட்டும் வெளியிட்டு சிம்பு ஏமாற்றிவிட்டார்.


சமீபத்தில் படத்திற்கான ஒரு காட்சி சென்னை தி.நகரில் உள்ள அக்கார்ட் என்ற ஓட்டலில் படமாக்கப்பட்டது. சிம்புவும் சந்தானமும் பைக்கில் வருவது போன்றும், அதில் சிம்பு அஜித்தின் முகமூடியையும், சந்தானம் விஜய்யின் முகமூடியையும் அணிந்து வந்தனர். அஜித்தும் விஜய்யும் ஒரே பைக்கில் வருவதை பார்த்து அந்த ஒட்டலில் இருந்தவர்கள் ஆச்சரியப்படுவது போன்றும் அதன்பின்னர் அவர்கள் முகமூடியை கழட்டி அவர்களை கேலி செய்வது போன்றும் காட்சிகள் எடுக்கப்பட்டன. இது சிம்புவின் ஐடியாதானாம்.


திரையரங்கில் இந்த காட்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று சிம்பு நம்புகிறார். மேலும் விஜய்யும் அஜித்தும் இனிமேல் திரையில் சேர்ந்து நடிப்பது என்பது முடியாத காரியம் என்றும் நாமே இதுபோல் ஏதாவது காட்சிகள் எடுத்து அவர்களை இணைத்துவைத்தால்தான் உண்டு என்றும் நகைச்சுவையுடன் சிம்பு கூறினாராம்.


படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, இப்போது அதற்கான வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறார் சிம்பு!

0 comments:

Post a Comment