Pages

Subscribe:

Ads 468x60px

Wednesday, 19 February 2014

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா - எக்ஸ்க்ளுசிவ் தகவல்!

டில்லி பெல்லியின் ரீமேக்கான சேட்டை படத்துக்கு பிறகு ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. விமல், ப்ரியா ஆனந்த், சூரி நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் இன்று (பிப்ரவரி 19) காலை ஏவிஎம் பிள்ளையார் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.


24ந் தேதி முதல் ஒரு வாரம் பின்னி மில்லில் ஷூட்டிங் நடக்கிறது. அதன் பிறகு ஒரு மாதம் தொடர்ச்சியாக தூத்துக்குடி பகுதியில் ஷூட்டிங் நடக்கிறது.


விமல், சூரி காமெடி காமினேஷன், விமல், ப்ரியா ஆனந்த் ரொமான்ஸ் ஆகியவை படத்தின் முக்கிய பகுதி. நண்பர்கள் இருவரும் ஒரு இடத்தை பிடிக்க ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் எப்படி காய் நகர்த்துகிறார்கள் என்பதை காமெடியாக காட்டப்போகிற படம்.


ஆர்.கண்ணன் ஒரு சொந்த கதையை படமாக எடுத்தால் ஒரு ரீமேக் படம் செய்வார். ஜெயம் கொண்டான், வந்தான் வென்றான் ஆகியவை சொந்த கதை. கண்டேன் காதலை, சேட்டை ரீமேக் படங்கள். இப்போது மீண்டும் சொந்த கதையை படமாக்குகிறார்.


குளோபல் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பனின் மகன் எம்.செராஃபின் சேவியர்தான் தயாரிப்பாளர். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் டைரக்டர் கண்ணன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துக் கொடுக்கிறார். இமான் இசை அமைக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.

0 comments:

Post a Comment