இன்றைய இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளரான அனிருத், கௌதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் துவங்கவுள்ளன. இயக்குனர் மணி ரத்னம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார்.
சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துவருவதால், தல படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமானே இசையமைக்கலாம் என்று கூறப்பட்டுவந்தது. ஆனால் தற்பொழுது அனிருத் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே சமயம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்துவரும் புதிய படத்திற்கும் அனிருத் இசையமைத்துவருகிறார். மேலும் விஜய் படமும், அஜித் படமும் வருகிற தீபாவளிக்கு வெளியாகலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய நட்சத்திரங்களின் படங்களுக்கு ஒரே சமயத்தில் இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் அனிருத்.

0 comments:
Post a Comment