Pages

Subscribe:

Ads 468x60px

Wednesday, 19 February 2014

மோகன்லாலுக்கு அறிவுரைக் கூறிய கமல்!

மலையாள படங்களில் மட்டும் அதிகமாக நடிப்பதால் தான் நடிக்கும் கதை விசயத்திலும், உடல் எடை விசயத்திலும் அதிக கவலை கொள்ளாமல் இருந்தார் மோகன்லால். அதோடு, உடல் எடையை கதைகளுக்கேற்ப மாற்றிக்கொள்ளவதில்லை. அதனால் படத்துக்குப்படம் மோகன்லாலின் உடல் பெருத்து எடை அதிகரித்துக்கொண்டே வந்தது.


இந்நிலையில், சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்ட கமலுக்கு வாழ்த்து சொல்ல சந்தித்தவர், அவர் உடம்பை இளவட்டமாக பராமரித்து வைத்திருப்பதைப்பார்த்து அசந்து விட்டாராம். எனக்கு வயிற்றிலும், முகத்திலும் சதை தொங்குகிறது. ஆனால் நீங்கள் அப்படி எதுவும் இல்லாமல் யூத்தாகவே இருக்கிறீர்களே எப்படி என்று வியப்புடன் கேட்டாராம்.


மேலும், தற்போது எனக்கு வயது 53, ஆனால் உங்களுக்கு 59. அனால் நீங்கள்தான் தம்பி மாதிரியும், நான் அண்ணன் மாதிரியும் இருக்கிறேனே. அதனால் நானும் உங்களை மாதிரி இளமையாக வேண்டும் என்று சொன்ன மோகன்லால், கமலிடம் இளமையின் ரகசியம் பற்றி கேட்டாராம். அதையடுத்து அவர் சொன்ன அட்வைஸ்படி இப்போது உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று தீவிரப்படுத்தியுள்ளாராம் மோகன்லால்.


அதோடு கேரளாவில் உள்ள பெரிங்கோடு என்ற இடத்துக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சையும் எடுத்துள்ளாராம். அதையடுத்து ஒரே மாதத்தில் 7 கிலோ எடை குறைந்து விட்டாராம். இந்த சந்தோசத்தை கொண்டாடும் வகையில், தனது புதிய போட்டோவை பேஸ்புக்கில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் மோகன்லால்.

0 comments:

Post a Comment