சிம்புவை விட்டு ஹன்சிகா விலகிச் செல்கிறார். இதை அவர் நாசுக்காக டுவிட்டரில் குறிப்பிட்டு விட்டார். ஆனால் இதற்கு பதில் சொல்லாமல் அமைதி காக்கிறார்
சிம்பு.ஒருவரையொருவர் காதலிப்பதாக சிம்பு, ஹன்சிகா இருவருமே டுவிட்டரில் அறிவித்தார்கள். சில மாதங்களிலேயே இவர்கள் காதல் முறிந்ததாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த சிம்பு, ஹன்சிகாவை காதலிப்பதாகவும் அவருடன் எந்த பிரச்னையும் இல்லை எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் டுவிட்டரில் காதலர் தினத்தன்று ஒரு கருத்து வெளியிட்டார் ஹன்சிகா. அதில், அனைவருக்கும் காதலர்கள் தின வாழ்த்துகள். காதலர் தினம் என்றாலும் நான் இப்போது சிங்கிள்தான் என ஹன்சிகா குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தை படித்து சிம்பு ஷாக் ஆகிவிட்டாராம்.
திடீரென, ஹன்சிகா எனது காதலிதான் என மீடியாவிடம் சிம்பு கூறியது ஹன்சிகா தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம். அதை வெளிப்படுத்தவே டுவிட்டரில் நான் சிங்கிள்தான் என ஹன்சிகா விளக்கம் அளித்திருக்கிறாராம். இது குறித்து பதில் ஏதும் சொல்லாமல் சிம்பு அமைதி காத்து வருகிறார்.

0 comments:
Post a Comment