Pages

Subscribe:

Ads 468x60px

Wednesday, 19 February 2014

தரமற்ற ஆடைகள் உடலுக்கு தீங்கு தரும்!

எமது அழகையும், கம்பீரத்தையு ம் அதிகரித்துக் காட்டுபவை ஆடைகள். நாம் அணியும் ஆடைகள் தரமானதாக இருந்தால் மட்டுமே அது உடலுக்கும் தீங் கு விளைவிக்காது, நமக்கும் அழகை தரும். என்ன மாதிரியான உடைகள் நமக்கு ஏற்றது என்று தெரியா மலேயே ஒரு சிலர் ஆடை அணிவார்கள். வீட்டில் அணிய வேண்டிய ஆடைகளை வெளியிலேயே யும், திருமணம் போன்ற பார்ட்டிகளுக்கு சாதாரணமாகவும் உடுத்திச் செல்வார்கள். இது சரியானதல்ல என்கின்றனர் ஆடை அலங்கார நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின் பற்றுங்களேன்.


தினசரியும் நாம் விலை உயர்ந்த ஆடைகளை அணிய முடியாது. ஆனால் சாதாரண cotton துணிகளை உடுத் தினால் கூட நேர்த்தி யாக சுருக்கமின்றி அயர்ன் செய்து உடுத்தினால் அது ரிச்சாக தெரியும். எனவே பேஷன் என்ற பெயரில் கண்டதையும் உடுத்தாமல் நமக்கு வசதியான ஆடைகளை அணிவதே நம் அழகை அதிகரித்துக் காட்டும்.ஆடை உடுத்துவது அழகோடு தொடர்புடையது மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. காலத்திற்கு ஏற்ற ஆடைகள் உடுத்துவது நம் மனதையும் மகிழ்ச்சிப்படுத்தும். கோடையில் cotton  ஆடை  அணிவது உடலையும், உள்ளத்தையும் உற்சாகப் படுத்தும்.


ஆடைகளின் வண்ணங்கள், மென்மை கலந்ததாக இருப்பது நல்ல து. கறுப்பு, சிவப்பு மற்றும், பிரகாசமான வண்ணங்கள், சூரிய ஒளியை உள் வாங்கும். இதனால், உடலின் நீர்ச்சத்து குறைந்து விடும். என வே கோடையில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.


எந்த ஒரு ஆடை அணிந்த உடன் அது நமக்கு ஏற்றதாக இருக்கிறதா? இது பொருந்துகிறதா? என்று கண்ணாடியின் முன் நின்று உங்களுக்கு நீங்களே சுய விமரிசனம் செய்துகொள்ளுங்கள். சரியான உள்ளாடைகள் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.


அதேபோல் பெண்கள் தாம் அணியும் ஆடைகளுக்கு ஏற்ற நகைகள், அணியவேண் டும். இருக்கிறது என்பதற்காக அள்ளிப் போட்டுக்கொள்ள வேண்டாம். அதிகமாக போட்டால் அழகு கூடாது ஆபத்துதான் அதிகமாகும். ஹேர்பேண்ட், காதணி, காலணி போன்றவை பொருத்தமாக  இருந்தால் கூடுதல் அழகுதான். அதற்கேற்ப பொரு ட்களை நாம் தேர்வு செய்ய வேண்டும்.


ஆடைகள் என்பது நம் மதிப்போடு தொடர்புடையது. ஏனோதானோ என்று உடுத்துவதை விட நமக்கு ஏற்ற உடைகளை தேர்ந்தெடுத்து அணிவதே அழகையும், மதிப் பையும் அதிகரிக்கும்.

0 comments:

Post a Comment