Pages

Subscribe:

Ads 468x60px

Wednesday, 19 February 2014

கமல்ஹாசனின் மருதநாயகம் - விரைவில் திரைக்கு வரும்! நம்பிக்கைப் பிறந்தது!

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் தி நெக்ஸ்ட் பிக் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவரும் குக்கூ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் உலக நாயகன் கமல்ஹாசனின் மருதநாயகம் திரைப்படத்தை தயாரிக்க ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் எண்ணற்ற வெற்றிப்படங்களைத் தயாரித்திருக்கும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் கடந்த 2011 ஆம் ஆண்டு எங்கேயும் எப்போதும் திரைப்படத்தினைத் தயாரித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்தது. அதைத் தொடர்ந்து வத்திக்குச்சி , ராஜா ராணி ஆகிய வெற்றிப்படங்களைத் தயாரித்த இந்நிறுவனம் தற்பொழுது குக்கூ மற்றும் முண்டாசுப்பட்டி ஆகிய படங்களைத் தயாரித்துவருகிறது.


இன்று சென்னையில் நடைபெற்ற குக்கூ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய கேயார் கமல்ஹாசனின் மருதநாயகம் திரைப்படத்தைத் தயாரிக்க ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


உலகநாயகன் கமல்ஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்து பட்ஜெட் பற்றாக்குறையால் நீண்ட நாட்களாகக் கிடப்பில் இருந்துவருகிறது மருதநாயகம் திரைப்படம். கடந்த 1997 ஆம் ஆண்டிலேயே இப்படத்தின் படப்பிடிப்புகள் துவக்கின என்பது குறிப்பிடத்தக்கது.


ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் போன்ற உலக அளவில் பிரசித்தி பெற்ற பெரிய படத்தயாரிப்பு நிறுவனம் இப்படத்தைத் தயாரித்தால் விரைவில் இப்படம் வெளியாக ஏதுவாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

0 comments:

Post a Comment