Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 23 February 2014

ராம்கி மீண்டும் கதாநாயகனாகும் தடா!

தடா சட்டத்தின் பெயரிலேயே ஒரு படம். பிரியாணியில் நடித்த ராம்கிக்கு வாழ்வுதரும் படம். அவர்தான் படத்தின் ஹீரோ.


ராம்கி ஹீரோ என்றால் அந்தப் படத்தை இயக்குகிறவர் ஒரு பழைய ஆளாகதான் இருப்பார். உங்கள் யூகம் சரிதான். பூந்தோட்ட காவல்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய செந்தில்நாதன்தான் படத்தின் இணை தயாரிப்பு மற்றும் இயக்கம்.


சிறையில் தண்டனை கைதியாக இருக்கும் ஒருவன் திட்டம் போட்டு பல கொலை, கொள்ளைகள் செய்கிறான். அவனது திட்டத்தை வெளியிலிருந்து நிறைவேற்றுவது வேறொருவன். சிறை அதிகாரியாக இருக்கும் ராம்கி சந்தேகத்தில் ரகசிய விசாரணை மேற்கொள்ளும் போது பல திடுக்கிடும் விஷயங்கள் தெரிய வருகின்றன.


முழுநீள ஆக்சன் படமாக உருவாகும் இதில் தம்பி ராமையா, ரமேஷ் கண்ணா, சந்தானபாரதி, வாகை சந்திரசேகர், ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.


படம் செம அடிதடியாக இருக்கும் என்கிறார் செந்தில்நாதன்

0 comments:

Post a Comment