Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 23 February 2014

பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைவை தடுக்க கூகுள் முயற்சி?

 பேஸ்புக் நிறுவனத்துடன் வாட்ஸ்ஆப் இணைவது உறுதியாகிவிட்ட நிலையில், அதைக் தடுப்பதற்கு கூகுள் நிறுவனம் முயற்சி செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்துடன் வாட்ஸ்ஆப் இணைகிறது என்ற செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஒப்பந்ததத்தை எப்படியாவது நிறுத்திவிட கூகுள், முயற்சி எடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 

வாட்ஸ்ஆப் நிறுவனத்தை வாங்குவதற்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தருவதாகப் பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில், பேஸ்புக் அதை விட அதிகமாக 19 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிவிட்டது. மேலும் கூகுள் நிறுவனத்தின் உரிமையாளர் லாரி பேஜ் தராத ஒரு சலுகையை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தந்துவிட்டார். வாட்ஸ்ஆப் நிர்வாகத்திற்கு பேஸ்புக் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இடம் தந்துவிட்டார். லாரி பேஜ்ஜின் இழப்பு, ஜுக்கர்பெர்க்குக்கு லாபமாக அமைந்துவிட்டது.

மேலும், வாட்ஸ்ஆப் மற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குள் பணம் தந்து விட கூகுள் முயற்சி செய்தது. அது நிறைவேறவில்லை.

இந்நிலையில், நேற்று காலை பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் படி, 19 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாட்ஸ்ஆப் நிறுவனத்தை பேஸ்புக் வாங்கிவிட்டதாகவும், வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, பேஸ்புக் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இடம்பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment