Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 23 February 2014

அவரும் வந்திட்டார் நடிப்பதற்கு...!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்தையும் சினிமா விடவில்லை. கிரிக்கெட் குறித்து தெலுங்கில் தயாராகும் படத்தில் வெங்கடேஷ் பிரசாத் நடிக்கிறார்.


இந்தியாவில் சினிமா நட்சத்திரங்களுக்குரிய பிரபலத்துடன் இருப்பவர்கள் கிரிக்கெட் வீரர்கள். அங்கேயும் வீராங்கனைகளுக்கு மதிப்பில்லை. கிரிக்கெட்டில் ரிட்டையர்ட் ஆனதும் சினிமா வாய்ப்புகள் இவர்களை தேடி வரும். அப்படிதான் வெங்கடேஷ் பிரசாத்துக்கும்.


தெலுங்கில் எஸ்.மோகன் இயக்கும் Sachin...Tendulkar Kadu என்ற படத்தில் இவர் கிரிக்கெட் கோச்சாக நடிக்கிறார். சிறுவன் ஒருவன் டெண்டுல்கரால் இன்ஸ்பயர் ஆகி கிரிக்கெட் வீரராவதுதான் கதை. அவனின் கோச்சாக வெங்கடேஷ் பிரசாத் வருகிறார். சிறுவனின் தாயாக சுகாசினி. ஏற்கனவே படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.


ஏழு வருடகாலம் இந்திய கிரிக்கெட் அணிக்காக வெங்கடேஷ் பிரசாத் விளையாடினார். அதில் 33 டெஸ்ட் போட்டிகளும், 161 ஒருநாள் போட்டிகளும் அடக்கம்.

0 comments:

Post a Comment