Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 23 February 2014

முதுகுவலிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முதுகுவலியைப் பற்றி கூறாதவர்களே இல்லை. ஏனெனில் அனைவரையும் வாட்டி வதைக்கிறது இந்த முதுகுவலி. நீண்டநேரம் சேரில் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும், சரியான உடற்பயிற்சி இல்லாவர்களுக்கும் முதுகுவலி பிரச்சினை வரும் வாய்ப்புள்ளது. மன அழுத்தம் இருந்தாலும் முதுகுவலி வரும் என்று கூறும் நிபுணர்கள் சூரியவெளிச்சம் படாமல் ஏ.சி ரூமிலேயே குடித்தனம் நடத்துபவர்களுக்கு முதுகுவலி வரும் என்கின்றனர்.

அலுவலகத்திற்கு மோட்டர் பைக், கார் போன்ற வாகனங்களில் பெரும்பாலோனோர் சென்று வருகின்றனர். நீண்ட தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு முதுகுவலி வர வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் காலையிலோ, மாலையிலோ சரியான அளவில் உடற்பயிற்சி செய்யவேண்டும்

மசாஜ் செய்வதன் மூலம் முதுகுவலியை குறைக்க முடியும் என்று கூறும் நிபுணர்கள். வெள்ளைப் பூண்டு எண்ணெயை வைத்து முதுகுப்புறங்களில் மசாஜ் செய்யலாம் என்கின்றனர். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேனை ஊற்றி குடிப்பதன் மூலம் முதுகுவலிக்கு நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர்.

வைட்டமின் ‘டி சத்து குறைவாக இருந்தால் கண்டிப்பாக முதுகுவலி வரும் வாய்ப்புள்ளது. ஒரு மனிதனுக்கு சுமார் 1000 யூனிட் முதல் சுமார் 2 ஆயிரம் யூனிட் வரை ஒரு நாளைக்கு வைட்டமின் `டி' தேவை என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். நமது உடலிலுள்ள பற்களும், எலும்புகளும் உறுதியாக இருக்க வைட்டமின் `டி' முக்கியத் தேவை.

முதுகுவலியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வைட்டமின் டி சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். பால், மீன் எண்ணெய், முட்டை, ஈரல், இறைச்சி, கொழுப்பு, தானியங்கள் ஆகியவற்றில் இயற்கையாகவே வைட்டமின் `டி' சத்து குறைவான அளவில் உள்ளது. நாம் அன்றாடம் சாப்பிடும் சில உணவுப் பொருட்களில் வைட்டமின் `டி' சேர்க்கப்படுகிறது. கீரைகள், ராகி போன்றவைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம் இதனால் உடலுக்குத் தேவையான வைட்டமின் ‘டி' சத்து கிடைக்கும்.

வைட்டமின் `டி' இயற்கையாகக் கிடைக்க மிகச்சிறந்த வழி `சூரியஒளி' மட்டுமே. உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் மூலாதாரமே சூரிய ஒளிதான். இயற்கையான, மிக சக்தி வாய்ந்த, மிகவும் பயனுள்ள சூரிய ஒளி நம் உடலின் மீது படுவதே வைட்டமின் `டி' சத்து நமது உடலுக்கு கிடைப்பதற்காகவே!. எனவே உடலில் குறிப்பிட்ட அளவு சூரிய வெளிச்சம் படாமல் வாழ்பவர்கள் முதுகுவலியினால் அவஸ்தைப் படவேண்டியதுதான் என்கின்றனர் நிபுணர்கள்.

இன்றைக்கு வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு  வரும் சுற்றுலா பயணிகள் சூரியவெளிச்சம் உடலில் படவேண்டும் என்பதற்காகவே அதிக தூரம் நடந்தே பயணம் செய்வார்கள். கடற்கரையில் சூரியக்குளியல் நடத்துவார்கள். ஆனால் நம் ஊரில் எளிதாக மிக மலிவாக காசு செலவில்லாமல் கிடைக்கும் சூரிய வெளிச்சத்தை நாம் கண்டுகொள்வதில்லை. இதனால்தான் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகவேண்டியிருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

பாடாய் படுத்தும் முதுகுவலியில் இருந்து தப்பிக்க காலை, மற்றும் மாலை நேரத்தில் இதமான சூரிய வெளிச்சம் படுமாறு வாக்கிங், ஜாக்கிங் செல்வதன் மூலம் இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்யமுடியும் என்பது நிபுணர்களின் ஆலோசனையாகும்.

0 comments:

Post a Comment