Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 23 February 2014

உலகை கலக்க வருகிறது ‘கேப்டன் அமெரிக்கா’..!

கேப்டன் அமெரிக்கா-தி விண்டர் சோல்ஜர் இந்த வருடத்தின் மிக பெரிய அதிரடி படம், தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு ஆகிய மற்ற பிராந்திய மொழிகளிலும் ‘எதற்கும் அஞ்சாதவன்’ என்ற பெயரில் கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல் 4-ஆம் தேதி அமெரிக்காவில் வெளியாகும் அதே நாளில் இங்கே தமிழகத்திலும் வெளியாகிறது.


நியூயார்க் நகரில் நடக்கும் பேரழிவுக்கு பிற ஸ்டீவ் ரோகேர்ஸ் அமைதியான முறையில் வாஷிங்டன் நகரில் வசித்து வந்து நவீன உலகிற்கு பழகி வருகிறார். தன்னுடைய சகாவுக்கு ஒரு ஆபத்து ஏற்படும்போது, அவரை காக்க ஸ்டீவ் முற்படும் போது, பிரபஞ்சத்துக்கு ஏற்பட இருக்கும் ஒரு பேரழிவு ஆபத்தை எதிர்நோக்குகிறார்.


தனக்கு எதிரான சதிகளை முறியடித்து, தன்னை ஒடுக்க வரும் ஆதிக்க சக்திகளை எதிர்க்க ப்ளாக் விடோ மற்றும் பால்கன் உடன் இணைந்து போராடும்போது தான் அறிகிறார், அவர் இப்போது போராட போவது – தி விண்டர் சோல்டர் என்ற மாபெரும் மகா அழிவு சக்தி உடைய எதிரி என்பதை.


உலக பிரசித்தி பெற்ற மார்வெல் காமிக்ஸ் புத்தகத்தின் தொடரான காப்டன் அமெரிக்காவின் முதல் பதிப்பு 1941-ஆம் வெளியிடப்பட்டது. அந்த தொடரின் பிரதிபலிப்பாக உலகமெங்கும் தற்போது திரை வடிவத்தில் வர இருக்கும் இந்த திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை முறியடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment