Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 23 February 2014

கௌதம் மேனன் படத்தில் பிருத்திவிராஜ்!

கௌதம் மேனன் படத்தில் பிருத்திவிராஜ் நடிக்கவிருக்கிறார்.

‘மொழி’, ‘அபியும் நானும்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய ராதா மோகன் விரைவில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.


இந்தப் படத்தில் ஏற்கெனவெ ராதா மோகன் இயக்கத்தில் நடித்திருக்கும் பிருத்திவிராஜ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.


மோகன்லாலுடன் ‘கீதாஞ்சலி’ என்ற மலையாள படத்தில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. ராதா மோகன் இயக்கும் முதல் மலையாள படம் இது. படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகிறது.


இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை மலையாளத்தில் கௌதம் மேனன் தயாரிக்கிறார். சிம்பு மற்றும் அஜித் நடிக்கும் படங்களின் வேலைகளில் கௌதம் மேனன் பிசியாக இருந்தாலும் தனது சொந்தத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

0 comments:

Post a Comment