Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 23 February 2014

நீதியரசர் வேடத்தில் மனுஷ்ய புத்திரன்!

கவிஞர் மனுஷ்ய புத்திரன் சிவப்பு படத்தில் முதல்முறையாக நடிகராக அறிமுகமாகிறார். சிறுபத்திரிகைகளில் தனது கவிதைகளால் அறியப்பட்டவர் மனுஷ்ய புத்திரன்.


காலச்சுவடு இதழில் பணிபுரிந்த போது பரவலாக கவனிக்கப்பட்டார். உயிர்மை பதிப்பகமும், மாத இதழும் அவரை பிரபலப்படுத்தியது. இன்று எந்த செய்திச் சேனலை திறந்தாலும் தனது கருத்துகளுடன் சேனல் முழுவதும் மனுஷ்ய புத்திரன் வியாபித்துள்ளார். அவர் கருத்து தெரிவிக்காத பிரச்சனைகள், சம்பவங்கள் இந்தியாவில் இல்லை.


உன்னைப்போல் ஒருவன் படத்தில் மனுஷ்ய புத்திரனை கமல் பாடலாசிரியராக அறிமுகம் செய்தார். சிவப்பு படத்தில் இயக்குனர் சத்யசிவா நடிகராக்கியுள்ளார்.


ஈழத்தமிழர் பிரச்சனையை தொட்டுச் செல்லும் இந்தப் படத்தில் மனுஷ்ய புத்திரன் நீதிபதியாக நடித்துள்ளார். சினிமாவில் தானொரு சிறந்த நடிகர் என்பதை மனுஷ்ய புத்திரனுக்கு வாழ்த்துகள்.

0 comments:

Post a Comment