Pages

Subscribe:

Ads 468x60px

Tuesday, 18 February 2014

பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கான ஆலோசனைகள் !

வார இறுதி அல்லது விடுமுறையை கழிக்க பைக்கில் நீண்ட தூரம் டரிப் சென்று வருவது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இதுபோன்று, பைக்கில் நீண்ட தூரம் செல்பவர்கள் அதிக முன்னெச்சரிக்கையுடனும் ,கூடுதல் முன்னேற்பாடுகளுடன் செல்வது மிக மிக மிக அவசியம்.
நீண்ட தூர பயணம் செல்பவர்கள் மிகுந்த திட்டமிடுதலுடன் செல்ல வேண்டும். இதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.

1. உங்களது பயணத்தை சுகமானதாக்குவதற்கு டயர்களின் பங்கு மிக முக்கியம். எனவே, டயர்கள் அதிக தேய்மானம் கொண்டதாக இருந்தால் மாற்றிவிடுங்கள். பார்த்துக்கொள்ளலாம் என்ற அலட்சியம் வேண்டாம்.

2.கிளட்ச், பிரேக் ஷூ ஆகியவை நன்றாக வேலை செய்கிறதா என்பதை பரிசோதித்து விடுங்கள்.

3.ஹெட்லைட், இன்டிகேட்டர், டேஞ்சர் விளக்குகள் சரியாக இயங்குகிறதா என்பதை செக்கப் செய்யுங்கள். குறிப்பாக, ஹெட்லைட் டிம், பிரைட் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்துங்கள்.

4.எஞ்சின் ஆயில் மாற்றவேண்டியிருந்தால் மாற்றிவிடுங்கள்.

5.மோட்டார்சைக்கிளின் ப்ரேம், சஸ்பென்ஷன் நன்றாக இருக்கிறதா? பார்த்து விடுவது நல்லது.

6.பஞ்சர், பிளக்கை சரிபார்க்க உதவும் ஸ்பானர்கள் மற்றும் டூல்ஸ் கிட்டை எடுத்துச் செல்வது அவசியம்.

7.மெல்லிய ஆடைகள் மற்றும் தடிமனனான ஆடைகள் இரண்டையும் எடுத்துச் செல்வது அவசியம். முடிந்தவரை எடையை குறைத்து எடுத்துச் செல்லுங்கள்.

8.பையில் பொருட்களை வைக்கும்போது கனமான பொருட்களை கீழேயும், எடை குறைந்த பொருட்களை மேலேயும் அடுக்கி எடுத்துச் செல்லுங்கள். இதனால், பைக்கின் பேலன்ஸ் அதிகரிக்கும்.

9. பிற மாநிலம் அல்லது அடுத்த நாட்டு எல்லையை கடக்க வேண்டியிருந்தால் அந்த பகுதியின் போக்குவரத்து விதமுறைகள் மற்றும் ஹெல்மெட் அவசியமா உள்ளிட்ட விபரங்களை அறிந்து செல்வது மிக முக்கியம்.

10.கையில் ஒரு ரூட் மேப் இருக்க வேண்டும். எரிபொருள் அளவை அறிய உதவும் ஸ்கேல் இருந்தாலும் கையில் வைத்துக்கொள்வது நல்லது.

11.பயணம் செல்லும் நாட்களின்போது தட்பவெப்பம் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே ஒரு ஐடியாவோடு செல்வது அவசியம். கையில் ஒரு சிறிய பாக்கெட் ரேடியோ இருந்தால் உதவிகரமாக இருக்கும்.

12. உங்கள் பயணத்திற்கு எவ்வளவு செலவாகும் என்பது குறித்து ஒரு பட்ஜெட்டை போட்டு, அதைவிட கொஞ்சம் கூடுதலான தொகையை எடுத்துச் செல்வது அவசியம். கையில் அதிக பணத்தை எடுத்துச் செல்லாமல் டெபிட், கிரெடிட் கார்டுகளாக இருந்தால் நல்லது.

13. பயணத்திற்கு உங்களது உடல்நிலை ரொம்ப முக்கியம். எனவே, உடல்நிலையை கருத்தில்கொண்டே பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.

14.கையில் எனர்ஜி பார் மற்றும் பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

15.இரவில் எங்கு தங்கவேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.

16. எதிர்பாராதவிதமாக விபத்து நடந்தால், உங்களை பற்றிய விபரங்கள் எளிதில் தெரியும் வகையில், சிறிய டைரி அல்லது அட்டைகளை பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுஙகள். சிகிச்சை ஏதாவது மேற்கொண்டு வந்தால் அந்த விபரங்களும் முழுமையாக எழுதி கையில் வைத்துக்கொள்வது முக்கியம்.

17.முதலுதவி பெட்டி ஒன்றை கையில் எடுத்துச்செல்லுங்கள்

18.நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை வீட்டிலோ அல்லது நண்பர்களிடத்திலோ அவ்வப்போது தெரியப்படுத்திவிடுங்கள்

19.உங்கள் பயணத்தின் பதிவுகளை படம் பிடிக்க கண்டிப்பாக கேமரா ஒன்றையும் எடுத்துச்செல்லுங்கள்.

20.கண்டிப்பாக மது அருந்திவிட்டு மோட்டார்சைக்கிளை ஓட்டாதீர். 

0 comments:

Post a Comment