Pages

Subscribe:

Ads 468x60px

Tuesday, 18 February 2014

‘காதலன் யாரடி? - திரைவிமர்சனம்!

நடிகர் : சிவஜித்

நடிகை : சில்பா

இயக்குனர் : ராஜேஷ் க்ரவுன்

இசை : அஸ்வின் ஜான்சன்

ஓளிப்பதிவு : ராஜேஷ் க்ரவுன்


நாயகி மாயாவின் அம்மா அந்த மாவட்டத்தின் கலெக்டர். மாயா ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் சேது என்பவரும் படித்து வருகிறார். சேதுவும், நாயகன் சக்தியும் நண்பர்கள். சக்தி மெக்கானிக் ஷெட் நடத்தி வருகிறார்.

நாயகியின் அம்மா ஒருநாள் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்படுகிறார். இவருடைய சாவுக்கு தீவிரவாதிகள்தான் காரணம் என்று போலீசும், பொதுமக்களும் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், அந்த கொலையை செய்தது அந்த ஊரில் பிரபல ரவுடியாக இருக்கும் நாகாதான் என்பது நாயகிக்கு தெரிய வருகிறது.

அவனை பழிவாங்க தன்னுடன் படிக்கும் சேது மற்றும் அவரது நண்பன் சக்தியுடன் சேர்ந்து திட்டம் தீட்டுகிறாள். இதனிடையே, நாயகிக்கு, நாயகன் சக்தி மீது காதல் வந்துவிடுகிறது.

இறுதியில் நாயகி ரவுடி நாகாவை பழிவாங்கினாரா? நாயகனும், நாயகியும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

நாயகன் சிவஜித் வளர்ந்த தாடி, முரட்டுத்தனமான தோற்றத்துடன் மிரட்டுகிறார். ரவுடி கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தோற்றம் கொண்டவரை நாயகனாக நடிக்க வைத்து வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவருடைய நடிப்பு சரியில்லை. நாயகி ஷில்பா அழகாக இருக்கிறார். அழுகை, கோபம் எல்லாம் நன்றாக வருகிறது. காதல் காட்சிகளில்தான் நடிப்பு வரவில்லை. நாயகனின் நண்பனாக வருபவருடைய நடிப்பும் பேசும்படியாக இல்லை.

கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங், தயாரிப்பு, இயக்கம் என ஒட்டுமொத்தத்தையும் கையில் எடுத்திருக்கும் ராஜேஷ் க்ரவுன், கதாபாத்திரங்கள் தேர்விலேயே கோட்டை விட்டு விட்டார். அதன்பிறகு கதையை எங்கே தேடுவது? ஒட்டுமொத்தமாக படத்தை சொதப்பியிருக்கிறார். அஸ்வின் ஜான்சன் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசை சொதப்பல்.

மொத்தத்தில் ‘காதலன் யாரடி?’ தேடத்தான் வேண்டும். 

0 comments:

Post a Comment