Pages

Subscribe:

Ads 468x60px

Tuesday, 18 February 2014

நீங்கள் உங்கள் ஜீன்சை எப்படி துவைக்கிறீர்கள்? இப்படித்தான் துவைக்கணும் !

நீங்க ஜீன்ஸ் வாங்கி எத்தனை நாள் ஆச்சு? எத்தனை தடவை துவைத்து இருக்கிறீர்கள்? என்று கேட்டால் அனைவரும் யோசிப்பார்கள். ஏனெனில் அதைத் துவைத்து பல மாதங்கள் ஆகியிருக்கும். மேலும் அடிக்கடி துவைத்தால், ஜீன்ஸ் அதன் தன்மை, நிறம் போன்றவற்றை இழந்துவிடும் என்றும் நினைத்து, அடிக்கடி வீட்டில் துவைப்பதையும் நிறுத்திவிட்டனர்.

 அதிலும் சிலர் ஜீன்ஸ் துவைப்பதற்கு லாண்டரி தான் சிறந்த வழி என்று எண்ணி அங்கு கொடுத்து துவைக்கின்றனர். ஆனால் ஜீன்ஸை சூப்பராக வீட்டிலேயே ஈஸியான முறையில் நிறம் போகாமலும், அதன் தன்மை மாறாமலும் இருக்க அழகாக துவைக்கலாம். அதற்கு உப்பு தான் சிறந்த பொருள். எப்படியெனில் உப்பை வைத்து ஜீன்ஸை துவைத்தால், ஜீன்ஸில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, துணியின் தன்மையும் அப்படியே இருக்கும். இப்போது உப்பை வைத்து எப்படி துவைப்பது என்று பார்ப்போமா!!!


உப்பை வைத்து எப்படி துவைக்க வேண்டும்?

முதலில் பக்கெட்டில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு டீஸ்பூன் உப்பை சேர்த்து, ஜீன்ஸை போட்டு 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பின் அந்த ஜீன்ஸை எடுத்து, வாஷிங் மிசினிலோ அல்லது கையிலோ லேசாக சோப்பு போட்டு துவைத்து, நீரில் அலச வேண்டும். அதிகமாக தேய்த்து விட வேண்டாம். ஏனெனில் பின் அதில் உள்ள துணியின் தன்மை குறைந்துவிடும்.

பின்பு மற்றொரு பக்கெட்டில் நீரை ஊற்றி, அதில் உள்ள நுரை போகும் வரை நன்கு அலச வேண்டும். பின் அதனை காய வைக்க வேண்டும்.

முக்கியமாக ஜீன்ஸ் துவைக்கும் போது, உட்பகுதி வெளியே இருக்க வேண்டும். பின் காய்ந்ததும், அதனை ஐயர்ன் செய்து சரியாக மடித்து வைக்க வேண்டும். இதனால் ஜீன்ஸ் நன்கு புதிது போன்று அழகாக சுத்தமாக இருக்கும்.

எதற்கு ஜீன்ஸை உப்பை வைத்து துவைக்க வேண்டும்?

* புதிய ஜீன்ஸை உப்பை வைத்து துவைத்ததால், ஜீன்ஸில் உள்ள நிறம் போகாமல், புதிது போன்று காணப்படும்.

* உப்பு துணிகளில் படியும் கறைகளை எளிதில் நீக்கிவிடும். அதாவது கறைகளை கஷ்டப்பட்டு தேய்த்து நீக்க வேண்டும் என்று இருக்காது.

* ஜீன்ஸை எப்போது துவைக்கும் போதும், உட்பகுதி வெளியே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் சாயம் போய், வெளுப்புடன் காணப்படுவதைத் தடுக்கலாம்.

* உப்பை சேர்த்து துவைத்தால், துணிகளில் உள்ள சாயம் வெளி வராமல் இருக்கும். மேலும் மற்ற துணிகளில் இருந்து வரும் சாயமும் எந்த துணிகளோடும் கலக்காமல் இருக்கும்.

* அதிலும் உப்போடு, சிறிது வெள்ளை வினிகரை கலந்து துவைத்தால், நல்லது.

* எப்போதும் ப்ளீச்சிங் பவுடரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை துணியில் உள்ள நிறத்தை முற்றிலும் வெளியேற்றிவிடும், பின் துணியின் தன்மையையும் குறைத்துவிடும்.
ஆகவே மேற்கூறியவற்றை நினைவில் வைத்து, ஜீன்ஸை துவைத்தால், ஜீன்ஸை சூப்பராக இருப்பதோடு, லாண்டரியில் துணிகளை போட வேண்டிய அவசியமில்லை.

0 comments:

Post a Comment