Pages

Subscribe:

Ads 468x60px

Tuesday, 18 February 2014

பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றை வாங்கப் போகிறீர்களா?


பயன்படுத்தப்பட்ட கார் வாங்குவது சிறந்த யோசனைதான். இருப்பினும், பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று வாங்கினால் அதன் பிறகு படும் அவஸ்தைகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடும். எனவே, யூஸ்டு கார்களை வாங்கும்போது சில கார் மாடல்களை தவிர்ப்பது நலம். பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கும்போது தவிர்க்க வேண்டிய சில கார் மாடல்களையும், அதன் விபரங்களையும் காணலாம்.

மிட்சுபிஷி லான்சர்

லான்சர்...  இது சிறந்த கார் என்பதை மறுப்பதற்கில்லை. ராலி பந்தயங்களில் பங்கேற்கும் விதமான உறுதியான சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிரு்பபது இதன் சிறப்பம்சம். ஆனால், போதுமான சர்வீஸ் நெட்வொர்க் இல்லாததும், ஸ்பேர் பார்ட்ஸ் தட்டுப்பாடும் இந்த காரை புறக்கணிக்க வேண்டியிருக்கிறது. அதிக அளவில் விற்பனையாகாத மாடல். ரிப்பேர் ஆகிவிட்டால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடும். பயன்படுத்தப்பட்ட கார் மார்க்கெட்டில் ரூ.1.95 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான விலையில் இந்த கார் கிடைக்கிறது.


ஸ்கோடா ஆக்டாவியா

அந்தஸ்தை விரும்புபவர்களின் முக்கிய தேர்வில் ஸ்கோடா ஆக்டாவியாவுக்கும் இடம் உண்டு. மாசுக்கட்டுப்பாட்டு பிரச்னையால் இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. ஆக்டாவியா அறிமுகம் செய்யப்பட்டபோது தரமான கட்டமைப்பும், சிறந்த வடிவமைப்பும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான விலை கொண்ட கார்களில் அதிகம் விற்பனையான மாடல் இது. அதேவேளை, பயன்படுத்தப்பட்ட ஆக்டாவியாவை வாங்குவது நல்ல முடிவாக இருக்காது.  ஸ்பேர் பார்ட்ஸ் விலை மிக அதிகம். உதாரணத்திற்கு, இதன் ஹெட்லைட் செட்டின் விலை ரூ.30,000ஐ தாண்டுகிறது. இதேபோன்று, சஸ்பென்ஷன் மற்றும் எஞ்சின் பாகங்களை மாற்றுவதற்கும் அதிக தொகையை அழ வேண்டியிருக்கும். நல்ல கன்டிஷனில் உள்ள ஆக்டாவியா யூஸ்டு மார்க்கெட்டில் கிடைத்தால் கூட ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து வாங்குவது உத்தமம்.

டாடா இண்டிகோ

சிறந்த மைலேஜ், குறைந்த ஆரம்ப விலை கொண்ட என்ட்ரி லெவல் செடான் என்பது இண்டிகோவுக்கு பலம். புதிதாக வாங்கும்போது பணத்திற்கு மதிப்புமிக்க கார் என்றே கூறலாம். ஆனால், பயன்படுத்தப்பட்ட கார் மார்க்கெட் என்று வரும்போது இண்டிகோ சிறந்த டீலாக இருக்காது. ஏனெனில், நீண்ட ஆயுட்காலத்திற்கான தரத்தை இண்டிகோ கொண்டிருக்கவில்லை. இதேபோன்று, சிறந்த பராமரிப்பு கொண்ட இண்டிகோ கார்களும் பயன்படுத்தப்பட்ட மார்க்கெட்டில் அரிதாகவே கிடைக்கின்றன. மேலும், பராமரிப்பு மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் விலை குறைந்ததாக இருந்தாலும், அடிக்கடி சர்வீஸ் சென்டருக்கு செல்ல வேண்டியிருப்பதாக உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


ஃபோர்டு ஐகான்


பயன்படுத்தப்பட்ட கார் மார்க்கெட்டில் அதிகம் கிடைக்கும் மாடல். ஓட்டுவதற்கு சிறந்த கார் என்றாலும் இதன் ஸ்பேர் பார்ட்ஸ் விலை நம்மை தலை சுற்ற வைத்துவிடும்.

செவர்லே ஏவியோ

சிறந்த இடவசதி என்பது ஏவியோவின் பலம், ஆனால், மேற்கண்ட கார்கள் போன்றே இந்த காருக்கான ஸ்பேர் பார்ட்ஸ் விலை மிக அதிகம். தவிர, ஸ்பேர் பார்ட்ஸ் தட்டுப்பாடும் இருக்கிறது. எனவே, இந்த பட்டியலில் உள்ள கார்களை வாங்கும்போது ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பதுடன், நல்ல மெக்கானிக்குகளிடம் ஆலோசனை பெற்று வாங்குவது நலம்!

0 comments:

Post a Comment