Pages

Subscribe:

Ads 468x60px

Tuesday, 18 February 2014

தங்கைக்கோர் கீதம் பாடிய சிம்பு!

டி.ராஜேந்தர் படம் என்றாலே செண்டிமென்டுக்கு பஞ்சமிருக்காது. அம்மா செண்டிமென்ட், தங்கை செண்டிமென்ட் என பிழிந்து ஊற்றி விடுவார்.


தனக்கு 10 வயதாக இருக்கும்போதே குழந்தையாக இருக்கும் தங்கையை சீராட்டி, சோறூட்டி, தாலாட்டி வளர்த்து ஆளாக்குபவர், பின்னர் தங்கைக்கு கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைப்பார். அந்த ஒவ்வொரு சூழலுக்கேற்ப தங்கைக்கோர் கீதம் பாடி, தான் செண்டிமென்ட்டான அண்ணனாக உயர்ந்து நிற்பார்.


அப்படி டி.ஆர்., தான் இயக்கிய படங்களில்தான் பாசமான அண்ணனாக உயர்ந்து நின்றார் என்றால், இப்போது அவரது மகனான சிம்புவோ நிஜத்தில் பாசமான அண்ணனான உயர்ந்து நிற்கிறார்.


அதாவது, சமீபத்தில்தான் சிம்புவின் ஒரே தங்கையான இலக்கியாவின் திருமணம் நடைபெற்றது. அதையடுத்து அவர் புகுந்த வீட்டுக்கு சென்று விட்டார். அதனால் சிறு வயதில் இருந்தே கூடவே வளர்ந்த அன்பு தங்கச்சியின் பிரிவு தன்னை வாட்டியெடுப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் சிம்பு.


மேலும், நான் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் நாட்களில், இலக்கியாவுடன்தான் அரட்டையடித்தபடி விளையாடிக்கொண்டிருப்பேன். ஆனால் இப்போது தங்கை இல்லாமல் வீடே வெறிச்சோடிக்கிடக்கிறது. அதனால், என்னையுமறியாமல் அழுகை வருகிறது. அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று டுவிட் செய்து தான் ஒரு பாசமான அண்ணன் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சிம்பு.

0 comments:

Post a Comment