Pages

Subscribe:

Ads 468x60px

Thursday, 20 February 2014

பி.வாசு யார் என்றே தெரியாது - ஐஸ்வர்யாராய்!

தமிழின் பிரபல இயக்குனர் பி.வாசு. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும் என்ற படத்தை தமிழ், தெலுங்கில் டைரக்ட் செய்ய இருப்பதாகவும். இது அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் தயாராகிறது என்றும். இதில் நடிக்க ஐஸ்வர்யாராய் சம்மதித்துவிட்டார் என்றும் அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட்டார். அது தொடர்பான படம் ஒன்றையும் வெளியிட்டார். இதனை இப்போது ஐஸ்வர்யாராய் மறுத்திருப்பதோடு பி.வாசு யார் என்றே தனக்கு தெரியாது எனவும் கூறியிருக்கிறார்.


மும்பை நிருபர்கள் ஐஸ்வர்யாராயை நேற்று சந்தித்து பேட்டி எடுத்தனர். அப்போது இதுபற்றி அவரிடம் கேட்டபோது சற்று கோபமாகவே பதில் அளித்திருக்கிறார். அவர் கூறியதாவது: நான் அப்படி எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. நடிக்க ஒப்புக் கொள்ளவும் இல்லை. நீங்கள் குறிப்பிடும் இயக்குனர் யாரென்றே எனக்குத் தெரியாது. தினம் நாற்பது ஐம்பது பேர் என்னை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று வருகிறார்கள். சிலரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்திக்கிறேன். அதையே அட்வான்சாக எடுத்துக் கொண்டு இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவது சரியல்ல. என்று கூறியிருக்கிறார்.


ஆனால் ஐஸ்வர்யராயை சந்தித்தது உண்மை. அவர் எனது படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதும் உண்மை என்று தெரிவித்திருக்கிறார் பி.வாசு. அவர் மேலும் கூறியிருப்பதாவது: நான் ஐஸ்வர்யாராயை சந்தித்ததும், கதை சொன்னதும் 100 சதவிகிதம் உண்மை. நான் ரஜினி படங்களை இயக்கியவன். ஐஸ்வர்யாராய் பெயரைப் பயன்படுத்தி சம்பாதிக்க வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை. ஐஸ்வர்யா, பி.வாசு யார் என்று கேட்கவில்லை. பி.வாசு, மணிரத்தினம் உள்ளிட்ட பலரிடம் கதை கேட்டுள்ளேன் எந்தப் படத்தில் நடிப்பது என்று முடிவு செய்யவில்லை என்றுதான் கூறியுள்ளார்.


எனது படத்தின் கதை ஐஸ்வர்யாராயை சுற்றித்தான் நடக்கும், ஹீரோவையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் ஒப்பந்தம் செய்யும்போது ஹீரோயின் யார் என்று கேட்பார்கள் அதற்காகத்தான் அவர் நடிக்கும் தகவலை வெளியிட்டேன். படப்பிடிப்புக்கு இன்னும் 8 மாதம் இருக்கும்போது இப்போதே ஏன் செய்தி கொடுத்தார் என்கிற வருத்தம் வேண்டுமானால் என்மீது இருக்கலாம். அதற்குரிய காரணங்களை அவரிடம் நான் தெரிவித்து விட்டேன். எனது படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பது முழு உண்மை.


இவ்வாறு பி.வாசு கூறியிருக்கிறார்.

0 comments:

Post a Comment