Pages

Subscribe:

Ads 468x60px

Thursday, 20 February 2014

ஆண்களுக்கான தலை முடி பராமரிப்பு!

தலை முடி பராமரிப்பு என்றாலே பொதுவாக அது பெரும்பாலும் பெண்களுக்கே பொருந்தும். அப்படி இருந்தும், ஆண்கள் கூட தங்கள் தலை முடி ஆரோக்கியமாகவும் பார்க்க அழகாகவும் காட்சி அளிக்க அதன் மீது கூடுதல் அக்கறை எடுக்கத் தான் செய்கிறார்கள். பல நேரங்களில் ஆண்கள் தங்கள் தலை முடியை குட்டையாக ட்ரிம் செய்யவே விரும்புவார்கள். அப்படியிருந்தும் கூட அதனை மினுமினுப்பாக, நல்ல வண்ணத்தில், அடர்த்தியாக வைத்திருக்க சில அழகு குறிப்புகளை பின்பற்ற வேண்டி வரும். ஆண்கள் ஆரோக்கியமான மினுமினுப்பான தலைமுடியை பெற சீரான முறையில் ஷாம்பு போட்டால் மட்டும் பத்தாது.


தலை முடி பராமரிப்பு என்றால் அதன் மீது அடிக்கடி கவனம் செலுத்தியாக வேண்டும். மேலும் சீரான முறையில் பராமரித்தால் தான் அதன் முன்னேற்றத்தை உங்களால் கணக்கிட முடியும். ஷாம்பு தடவிய தலை முடியை பல வழிகளில் கண்டிஷனிங் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் அடுத்த முறை ஷாம்பு போடும் வரை தலை முடி பளபளப்பாக இருக்கும். தலை முடி திடமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டுமானால் தலைக்கு சீரான முறையில் எண்ணெய் தேய்ப்பது என்பது அவசியமான ஒன்றாகும். வெதுவெதுப்பான எண்ணெயை கொண்டு உங்கள் தலைக்கு மசாஜ் செய்தால் அது முடிகளின் வேர் வரை ஊடுருவி முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் மசாஜ் செய்வதால் உங்கள் தலையின் இரத்த ஓட்டமும் சீராகும். அதனால் வளரும் முடி திடமாகவும் இருக்கும்.


தலைமுடியை அதன் வகையை பொறுத்து பிரிக்கலாம் - எண்ணெய் பதமுள்ள, வறண்ட மற்றும் இயல்பு. உங்கள் ஷாம்பு, எண்ணெய், கண்டிஷனர் மற்றும் தலை முடி பராமரிப்பு பொருட்களை உங்கள் முடியின் வகையை பொறுத்தே தீர்மானிக்க வேண்டும். பொதுவாக வறண்ட தலைமுடி என்றால் ஜொஜோபா, கற்றாழை போன்ற மாய்ஸ்சரைஸிங் பொருட்கள் கலந்துள்ள ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்த வேண்டும். இதுவே எண்ணெய் பதமுள்ள முடியை கொண்டிருந்தால் அதற்காக விற்கப்படும் பொருட்களை வாங்கி தலையை சீரான முறையில் கழுவ வேண்டும்.
ஆண்களுக்கான புகழ்பெற்ற தலை முடி பராமரிப்பு டிப்ஸ் சிலவற்றை தெரிந்து கொண்டு அவைகளை பின்பற்றுங்கள்...


சீரான முறையில் முடியை அலசுதல்
நீங்கள் எவ்வகை முடியை கொண்டிருந்தாலும் பரவாயில்லை. உங்கள் தலை முடி வகைக்கேற்ப நீங்கள் வாங்கிய ஷாம்புவை கொண்டு தலை முடியை சீரான முறையில் அலச வேண்டும். ஷாம்புவை தீர்மானிப்பதில் உங்களுக்கு பிரச்சனை இருந்தால், நல்ல சரும மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

ஷாம்பு

ஷாம்புவை தேர்ந்தெடுத்து அதை பயன்படுத்த ஆரம்பித்த பின், வேறு ஷம்பூவிற்கு கண்டிப்பாக மாறக் கூடாது. ஒவ்வொரு ஷாம்புவும் தன் பயனை காட்ட சில நாட்கள் எடுக்கும். ஒரு வேளை அந்த ஷாம்புவால் நீங்கள் பயனை பெற்று விட்டால் அதன் பின் வேறு ஷாம்புவை நீங்கள் மாற்றலாம்.

எண்ணெய் தேய்த்தல்

தலை முடிக்கு சீரான முறையில் எண்ணெய் தேய்த்தல் என்பது முடி பராமரிப்பில் எப்போதுமே முக்கிய பங்கு வகித்து வருகிறது. எண்ணெய் தேய்த்தல் என்பது பன்முக பயனை கொண்டுள்ளது. அது ஆரோக்கியமான தலைமுடி வளர உறுதுணையாக இருக்கும். வெதுவெதுப்பான எண்ணெய்யை கொண்டு உங்கள் தலைக்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள். ஒரு இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். அல்லது குறைந்தது 3 மணி நேரமாவது அது உங்கள் தலைமுடியில் செயலாற்ற விடுங்கள்.

கண்டிஷனிங்

தலைமுடியை கண்டிஷனிங் செய்தால் உங்கள் தலைமுடியின் அமைப்பு நயம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும். இதற்கு கத்தாழை, ட்ரீ டீ எண்ணெய், ஜோஜோபா எண்ணெய் போன்ற பல இயற்கை கண்டிஷனர்களை பயன்படுத்தலாம். சந்தையிலும் கூட பல கண்டிஷனர்கள் கிடைக்கிறது. அதுவும் கூட உங்கள் தலைமுடியை வழுவழுப்பாகவும் மென்மையாகவும் வைத்திருக்கும்.

காய வைத்தல்

ஷாம்பு போட்டு குளித்த பின் தலை முடியை காய வைக்க பல வழிகள் உள்ளது. சில நேரம் கண்டிஷனர் போட்டு குளித்த பின் தலையை சுற்றி துண்டை கட்டி அப்படியே விட்டு விட வேண்டும். ட்ரையரை பயன்படுத்தியும் கூட உங்கள் தலை முடியை காய வைக்கலாம். ஆனால் ட்ரையர் பயன்படுத்தும் போது தலை முடி கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சீர்ப்படுத்தல் மற்றும் அளவு

ஷாம்பு போட்டு குளித்த பின்பு தலைமுடியை சீர்ப்படுத்தி மென்மையாக்க வேண்டும். அப்பது தான் முடி உதிர்வு ஏற்படாது. அதே போல் தலை முடியை நீண்ட நேரமும் சீர்படுத்த கூடாது. மேலும் கைக்கு வந்த திசையில் சகட்டு மேனிக்கு வேகமாகவும் செய்யக் கூடாது. அப்படி செய்தால் முடி உதிர்வு அதிகமாக இருக்கும். உங்கள் தலை முடியை மென்மையாக கையாளுங்கள். குளித்த பின்பு போட வேண்டிய கண்டிஷனரை பயன்படுத்தி முடியை காத்திடுங்கள்.

பாதுகாப்பான ஹேர் டை

பல ஆண்களுக்கு தலை முடி நரைக்க ஆரம்பித்தால் வயது ஏறுகிறது என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்கும். அதனால் அவர்கள் மனம் உடைந்து தன்னம்பிக்கையை இழந்து விடுவார்கள். அப்படி நரை ஏற்பட்டால் முடிந்த வரை மூலிகை தன்மையுள்ள ஹேர் டை அல்லது ஆர்கானிக் ஹேர் கலரிங்கயே பயன்படுத்துங்கள். அம்மோனியா போன்ற ரசாயனங்கள் கலக்காத இயற்கை ஹேர் கலரிங்கை பயன்படுத்துங்கள். உங்கள் தலை முடி வகைக்கு எந்த ஹேர் டை ஒத்துப் போகும் என்று வல்லுனரிடம் கூட கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

0 comments:

Post a Comment