Pages

Subscribe:

Ads 468x60px

Thursday, 20 February 2014

நாய்தான் ஹீரோ, சிபிராஜ் இரண்டாவது ஹீரோ.தான்!

வாரிசு நடிகர்களில் சிபிராஜூம் ஒருவர். ஸ்டூடன்ட் நம்பர்-1, லீ, நாணயம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனாலும் சிபி ராஜால் நிலைத்து நிற்க முடியவில்லை. இப்போது சிபி, 'நாய்கள் ஜாக்கிரதை' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நாய்தான் ஹீரோ, சிபிராஜ் இரண்டாவது ஹீரோ. படப்பிடிப்பு முடியும் நிலையில் இருக்கிறது. நாயுடன் நடித்த அனுபவம் பற்றி சிபிராஜ் கூறியிருப்பதாவது:


நாயை வைத்து எனக்கு ஒரு காரியம் ஆகணும். அதனால அந்த நாய் எனக்கு முக்கியம். இதுதான் படத்தோட ஒண்லைன் ஸ்டோரி. முதல்ல நான்தான் ஹீரோவா நடிக்கிறதா இருந்தது. திரைக்கதையை எழுதி முடித்த பிறகு காட்சிகளை எண்ணிப் பார்த்தால் என்னை விட நாய்க்குதான் அதிக சீன் இருந்தது. அப்போ அதுதானே ஹீரோ. நான் செகண்ட் ஹீரோ.


படத்துல நடிச்சிருக்கிறது பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஷெப்பர்ட் வகை நாய். பெயர் இடோ. ராணுவ பணிகளுக்காக பயிற்சி அளிக்கப்பட்டது. வெடிகுண்டுகளை கண்டு பிடிக்கும். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் தாக்கினால் தாக்கியவனை கடிக்கும், முன்னால் யார் ஓடினாலும் அதற்கு அவன் எதிரி. இதுதான் இந்த நாய்க்கு அளிக்கப்பட்டிருக்கும் பயிற்சி. கொஞ்சம் ஆபத்தான நாய்தான். ஆனாலும் தைரியாமா நடிச்சேன். இதுவரைக்கும் 12 முறை அது என்னை கடிச்சிருக்கு. உடனே சிகிச்சை அளிக்க டாக்டர் அருகிலேயே இருப்பார். ஆன்டி வைரஸ் ஊசி போட்டுகிட்டுதான் நடிக்கவே ஆரம்பிப்பேன்.


இடோவும் நானும் இப்போ பிரண்ட். இன்னும் கொஞ்ச நாள்ல ஷூட்டிங் முடிஞ்சிடும். இடோவ அதோட இடத்துல கொண்டுபோய் விடணும். இப்போ நினைச்சாலும் மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு. எத்தனை லட்சம்னாலும் இடோவ வாங்கிடலாமுன்னு நினைச்சேன். "சாரி இது ராணுவத்துக்கு பழக்கப்படுத்தின நாய் தனி நபருக்கு தர முடியாது"ன்னு சொல்லிடாங்க என்கிறார் சிபி.

0 comments:

Post a Comment