விஷால்- லக்ஷ்மிமேனன் இணைந்து நடித்துவரும் நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. அதிகமான சந்தோஷம், துக்கம், கோபம் போன்ற உணர்வுகள் ஏற்பட்டால் உடனே தூங்கிவிழுந்துவிடும் நோய் கொண்டவராக விஷால் நடித்துள்ளார்.
வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் பயணிப்பதால் ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யூ.டி.வி.மோசன் பிக்சர்ஸ் மற்றும் விஷால் பிலிம் பேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துவருகின்றன.
விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் திரு இப்படத்தை இயக்கிவருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
புதுவகை இசைக்கோர்ப்பில் இப்படத்தின் இசை உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மார்ச் மாதத்தில் இசை வெளியீடும், ஏப்ரலில் திரைப்படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment