Pages

Subscribe:

Ads 468x60px

Thursday, 20 February 2014

இராகம் !


இராகம் என்பது இந்திய பாரம்பரிய இசையில் பயன்படுத்தப்படும் இசை வடிவங்கள். இவை வைதீக இசையின் அடிப்படையில் அமைந்துள்ளன என்று பலர் கூறுகின்றனர்.


 இந்திய பாரம்பரிய இசை இராகங்களின் அடிப்படையில் அமைக்கபட்டிருக்கின்றது. இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையைக் குறிக்கும்.


"இராகம், ஒரு பாட்டை எவ்வாறு உருவாக்கலாம் என்று காட்டும் விதிகளை விளக்குகின்றன எனலாம். அது இசை மேலே செல்லும்போதும் (ஆரோகனத்தில்) கீழே செல்லும்போதும் (அவரோகனத்தில்) எந்த ஸ்வரங்களை வரிசையில் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது.


ஒவ்வொரு இராகத்திலும் ஐந்து, ஆறு அல்லது ஏழு ஸ்வரங்கள் இருக்கும். வெகு சில இராகங்களில் மட்டும் நான்கு அல்லது மூன்று ஸ்வரங்களோ, அல்லது ஏழுக்கு மேல் ஸ்வரங்கள் (அன்னிய ஸ்வரங்களை கூட்டி) வரலாம்.


ஐந்து ஸ்வரங்கள் கொண்ட ராகங்கள் ஔடவ ராகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆறு ஸ்வரங்கள் கொண்ட இராகங்களுக்கு ஷாடவ ராகம் என்ற பெயர் உண்டு.


எல்லா ஏழு ஸ்வரங்களையும் கொண்டுள்ள ராகங்கள் சம்பூர்ண ராகங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஒரு ராகத்தின் ஆரோகனத்திலோ அவரோகனத்திலோ ஸ்வரங்கள் சரியான வரிசையில் இல்லையென்றால் இது வக்ர ராகம் என்று அழைக்கப்படும்.


கர்நாடக இசையில், ஏழு ஸ்வரங்களையும் சரியான வரிசையில் கொண்டுள்ள 72 ராகங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு மேளகர்த்தா இராகங்கள் என்ற பெயர் உண்டு

0 comments:

Post a Comment