Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 24 February 2014

ஓ காட்... கடைசியில் காதலனை கண்டுப் பிடிச்சிட்டேன்!

பிபாசா பாசு ஓபன் டைப். எதை மறைக்கிறாரோ இல்லையோ, யாருடன் டேட்டிங் செய்கிறேன் என்பதை மட்டும் மறைக்கவே மாட்டார்.


ஜான் ஆபிரகாமும் இவரும் ஓருடலும் ஓருயிருமாக (தப்பா எழுதலை) இருந்தது நாடறியும். கல்யாணம் செய்து கொள்ளவில்லையே தவிர இரண்டு பேரும் சேர்ந்தே இருந்தனர்.

ஜான் ஆபிரகாம் தனது அன்பையும், காதலையும் சோசலிஸம் செய்ய ஆரம்பித்ததும் அவர்களிடையே பிரிவு உண்டாகி நிரந்தரமாக பிரிந்தனர். ஜான் இப்போது வேறொருவரை திருமணம் செய்து குடும்பஸ்தனாகிவிட்டார்.


பிபாசா பாசு சக நடிகர் ஹர்மன் பவேஜாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார். இருவரும் திருமணம் செய்வார்கள் என பேச்சு உள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் எதுவும் சொல்லவில்லை.


பிபாசாதான் ஓபன் டைப் ஆயிற்றே. ஹர்மன் பவேஜாவுடன் சேர்ந்து வாழ்வது உண்மைதான். கடைசியில் - என்னை விட ஒரு நல்ல மனுஷனை கண்டு பிடித்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.


ஜானை போல் ஹர்மனும் சோசலிஸ்ட் ஆகும் முன் திருமணத்தை முடிச்சிடுங்க.

0 comments:

Post a Comment