Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 24 February 2014

பரபரப்பு போஸ்டர் ஒட்டிய டைரக்டர் !

தமிழில் ரம்யா என்ற பெயரில் குத்து படத்தில் அறிமுகமான குத்து ரம்யா, முதலில் இவர் கன்னட படங்களில் திவ்யாஸ் பந்தனா என்ற பெயரிலே நடித்து வந்தார்.

ரம்யா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாண்டியா தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆனார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட இருக்கிறார். பிப்ரவரி 21 அன்று பெங்களூர் நகரில் பரபரப்பு போஸ்டர் ஒன்றை ஒட்டியிருந்தார் கன்னட டைரக்டர் வெங்கட் என்பவர்.

அந்த போஸ்டரில் இருந்தது பின்வருமாறு :

“ரம்யா… என்னுடைய எண்ணங்களை ஏன் புரிந்து கொள்ளாமல் இருக்கிற. என்னுடைய காதலை ஏற்றுக் கொள்வாயா? மாட்டாயா? என்று தெரியாது. அடுத்த வாரம் உன்னை கடத்திச் சென்று பனசங்கரியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொள்வேன். இதனை யாராலும் தடுக்க முடியாது. இது படத்திற்காக எழுதப்பட்ட வசனம் அல்ல. உண்மையில் இது நடக்கும். நான் அடுத்து எடுக்கப்போகும் படத்துக்கு ஹிச்சா வெங்கட் (பைத்தியக்கார வெங்கட்) என்று பெயர் வைத்திருக்கிறேன்”

இப்படி கன்னடத்தில் குறிப்பிட்டிருந்தது அந்த போஸ்டரில். இது சினிமாவுக்கான புதுமையான விளம்பரமா? அல்ல நிஜமாகவே மிரட்டுகிறாரா என்று குழம்பிப் போனார்கள், போலீசார்,. ரம்யாவும் இதுபற்றி எந்த புகாரும் குடுக்கவில்லை. இந்த வெங்கட், 2010ம் ஆண்டு தனக்கும், ரம்யாவுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக பத்திரிகை அடித்து விநியோகித்து காமெடி பண்ணியவர்தான். அதனால் சினிமா உலகத்தினரும் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனாலும் “தற்போது ரம்யா ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் போலீசார் இதனை ஈசியாக எடுத்துக் கொள்ள முடியாததால் டைரக்டர் வெங்கட்டிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

0 comments:

Post a Comment