Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 24 February 2014

பெண்கள் வயிற்றில் தோன்றும் கட்டிகளுக்கு சத்திர சிகிச்சை இனித் தேவையில்லை!

ஃபைப்ரொய்ட்’ என்பவை, பெண்களின் கர்ப்பப்பைச் சுவர்களில் மென்மையான தசைப்பகுதிகளில் சாதாரணமாகக் காணப்படுகின்ற நோய்க்கட்டிகளேயாகும். ‘யுட்டிரெஸ் ஃபைப்ரொய்ட்’ எனப்படும் புற்று நோய் அல்லாத கர்ப்பப்பை கட்டிகள், தாய்மைப்பேறு அடையக்கூடிய வயதுடைய பெண்களில் பொதுவாகக் காணப்படுகின்ற நோயாக இருக்கின்றது. இதனைச் சரியான நேரத்தில் குணப்படுத்த தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றால் பல விதமான உடல் நலச்சிக்கல்களை உருவாக்கிவிடும்.

இவ்விதமான கட்டிகள் தனியொன்றாகவோ அல்லது கூட்டமாக வெவ்வேறு அளவுகளிலோ இருக்கக் கூடும். சுமார் 77% சதவிகிதமான பெண்கள் இவ்வாறான கட்டிகளால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர் என, மருத்துவ ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால்,  அவர்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு இல்லாதிருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதே. ஏனெனில் இந்தக் கட்டிகள் மிகச்சிறிய அளவிலேயே இதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன. சில சமயங்களில் அறிகுறிகளே தென்படாமலும் இருக்கலாம். இதன் காரணமாகவே 25% சதவிகிதமான பெண்கள், இதன் கடும் பாதிப்புகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது என அமெரிக்காவின் சுகாதாரத்திற்கான தேசிய நிறுவகம் (நெஷனல் இன்ஸ்டிடியூட் ஒஃப் ஹெல்த்) தெரிவித்துள்ளது.

பெண்களில் உருவாகக் கூடிய கர்ப்பப்பைக் கட்டிகள் வெவ்வேறு விதமாக இருக்கின்றன. இவை பொதுவாக நான்கு விதங்களில் தோன்றலாம். ‘சப் செரோஸால்’ என்னும் கட்டிகள், கர்ப்பப்பைக்கு வெளியிலேயே தோன்றி வெளிப்பக்கத்திலேயே வளரக்கூடியவை. ‘இன்ட்ராமுரல்’ கட்டிகள் என்பவை, கர்ப்பப்பையின் உட்புறச் சுவரில் தோன்றி விரிவடைந்து கர்ப்பப்பையை சாதாரண நிலையைவிட மிகவும் பெரியதாகத் தோன்றச் செய்யும். ‘சப்மியூகோசால்’ என்பவை, கர்ப்பப்பை குழிக்கு அடிப்பாகத்தில் தோன்றி அதிகப்படியான மாதாந்திர ரத்தப்போக்கு, குழந்தைப் பேறின்மை மற்றும் குறைப்பிரவசத்திற்கான காரணியாகவும் விளங்கும். நான்காவதாக ‘பெடன்குளேடட் ஃபைப்ரொய்ட்’ எனப்படும் கட்டிகள். இவை, கர்ப்பப்பைக்கு உள்ளே அல்லது  வெளியே இணையும் தண்டின்மேல் உருவாகி பெண்களுக்கு வலி ஏற்படும்படி செய்யும்.

‘யுட்டரைன் ஃபைப்ரொய்ட்’ என அழைக்கப்படும் கர்ப்பப்பைக் கட்டிகளின் நோய் அறிகுறியாக மிக அதிகமான இரத்தப்போக்கு அல்லது வலியுடன் கூடிய மாதவிடாய், அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரண்டு மாதவிடாய்களுக்கு இடையில் இரத்தப்போக்கு, உறவின்போது வலி, அடிவயிறு கனத்திருப்பதைப் போன்ற உணர்வு, கீழ் முதுகில் வலி மற்றும் குழந்தைப் பேறின்மை முதலியன இருக்கும்.

இதுவரையிலும் கர்ப்பப்பை கட்டிகளுக்கான முக்கிய சிகிச்சை பெரும்பாலும் சத்திர சிகிச்சையாகவே இருந்து வந்தது. மருந்துகள் குறுகிய கால நிவாரணத்தை மட்டுமே தந்து பின் சத்திர சிகிச்சைக்கும் வழிவகுத்தன. ஆயினும் தற்போதைய மருத்துவ முன்னேற்றங்களும் தொழில்நுட்ப வளர்ச்சிகளும் கர்ப்பப்பை சிகிச்சையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தித் தந்துள்ளன. இவற்றில் ‘ஹார்மோனல் தெரபி’, ‘ஹிஸ்டரெக்டமி’,  ‘மயோமக்டமி’ மற்றும் ‘எம்ஆர்ஜி எப்யூஎஸ்’ ஆகியவை முக்கியமானதாகக் கருதப் படுகின்றன. இவற்றுள்,  ‘எம்ஆர்ஜி எப்யூஎஸ்’ முறை மூலமாக வெட்டுஇ காயத்தழும்புகள்,  மயக்க மருந்து,  மருத்துவமனையில் நீண்ட நாட்கள் தங்க வேண்டிய அவசியம் முதலியவற்றை தவிர்த்துக் கொள்ளலாம்.

0 comments:

Post a Comment