Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 24 February 2014

கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் தாய்மை அடைந்த பின்னரே நிறைவுறுகிறது. அந்த வகையில் கருத்தரிக்கும் போது பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் உண்ணும் உணவுகளில் இருந்து, மேற்கொள்ளும் பழக்கங்கள் வரை அனைத்திலும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஏனெனில் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையினால், கருத்தரிப்பதே கஷ்டமான ஒரு விஷயமாகிவிட்டது. எனவே கருத்தரித்த பின்னர் பெண்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அது வயிற்றில் வளரும் சிசுவிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.  குறிப்பாக கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். ஆனால் ஒருசில பழங்களை தொடவே கூடாது. அதில் பப்பாளி மற்றும் அன்னாசி கருவிற்கு ஆபத்தை விளைவிக்கும் பழங்கள். எனவே இதனை தொடாதீர்கள்.

மீன்களில் அதிக அளவில் கல்சியம் இருப்பதால், அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. குறிப்பாக சுறா மற்றும் ராஜா கானாங்கெளுத்தி போன்றவைகளை சாப்பிடவே கூடாது. வேண்டுமானால் சால்மன் மீன் சாப்பிடலாம். ஆனால் அதுவும் மாதத்திற்கு ஒரு முறை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.

இறைச்சிகளை சாப்பிடும் போது பாதியாக வேக வைத்து சாப்பிடக்கூடாது. இதனால் இறைச்சியில் உள்ள கிருமியானது சிசுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இறைச்சியை நன்கு மென்மையாக வேக வைத்து சாப்பிட வேண்டும். மேலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தொடவே கூடாது.

பாலில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் பாலை அதிகம் குடிப்பார்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் பாலை பச்சையாக குடிக்கக்கூடாது.
அனைவருக்குமே முட்டை பிடிக்கும். ஆனால் கர்ப்பிணிகள் முட்டையை பச்சையாகவோ அல்லது பாதியாக வேக வைத்ததையோ சாப்பிடாமல், நன்கு வேக வைத்த முட்டையை தான் சாப்பிட வேண்டும்.

அனைத்து பாற்கட்டிகளுமே ஆபத்தானவை அல்ல. ஆனால் ஒருசில பாற்கட்டிகளானது சுத்திகரிக்கப்படாத பச்சையான பால் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும். அத்தகைய பாற்கட்டிகளை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். வேண்டுமானால், சுத்திகரிக்கப்பட்ட பால் கொண்டு செய்யப்பட்ட பாற்கட்டி சாப்பிடலாம்.
பலச்சாறு என்று கடைகளில் விற்கப்படும் பலச்சாறுகளை வாங்கி குடிப்பதை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் சுத்தம் இருக்காது. வேண்டுமானால், வீட்டிலேயே செய்து குடிக்கலாம்.

கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் ஈரல் எனப்படும் இறைச்சிகளின் கல்லீரல். ஏனெனில் இவற்றில் வைட்டமின் ஏ அளவுக்கு அதிகமாக இருப்பதால், இது சிசுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

காப்பைன் உள்ள பொருட்களை, கர்ப்பத்தின் ஆரம்பத்தில் தவிர்க்க வேண்டும். மேலும் கர்ப்ப காலம் முழுவதும் அளவாகத் தான் காப்பைன் உள்ள பொருட்களான தேனீர், காபி, சாக்லெட், குளிர் பானங்கள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

எக்காரணம் கொண்டும் ஆல்கஹால் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் சுவைத்துக் கூட பார்த்துவிட வேண்டாம். இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, சில சமயங்களில் கருச்சிதைவையும் ஏற்படுத்திவிடும்.


0 comments:

Post a Comment