Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 24 February 2014

தரை துடைக்கும் வேலைமுதல் வாட்ஸ் ஆப் நிறுவனர் வரை - சோதனையை சாதனையாக்கிய கோம்!

 இளைய சமூகத்தினர் மத்தியில் மிக பிரபலமான மொபைல் அப்ளிகேஷன் வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான ஜான் கோம் தன்னுடைய இளைய வயதில் உணவிற்காக வரிசையில் காத்திருந்தும், வறுமையுடன் போராட தரை துடைக்கும் வேலையையும் செய்தும், தற்போது மிக பெரிய வெற்றி பெற்று சோதனையை சாதனையாக மாற்றியுள்ளார்.

உக்ரைனிலிருந்து பணம் இல்லாமல் தனது தாயாரோடு அமெரிக்காவிற்கு வந்த போது ஜான் கோம்மின் வயது 16.

சாப்பாட்டுக்கு வழியி்ல்லாமல், ஒரு மளிகை கடையில் தரையை சுத்தம் செய்யும் வேலையில் சேர்ந்த கோம், ஒரு பழைய புத்தக கடையில் இருந்து கையேட்டை கடனுக்கு வாங்கி கம்யூட்டர் நெட்வர்கிங் படித்தார்.

இம்மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 38வது பிறந்தநாளை கொண்டாடும் கோம், 1997 ஆம் ஆண்டு சிலிகான் வாலியில் படித்துக்கொண்டிருந்த போது படிப்புச் செலவுக்காக ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பகுதி நேர வேலையிலும் சேர்ந்தார். அந்த சமயத்தில்தான் யாஹு நிறுவனத்திற்காக ஒரு வேலைக்குப் போயிருந்தபோது பிரையன் ஆக்டனுடன் நட்பு ஏற்பட்டது.

இவர்கள் இருவரும் மிகச் சிறந்த, நெருக்கமான நண்பர்களான பிறகு யாஹு நிறுவனத்திலேயே வேலையில் சேர்ந்தார் கோம்.

இந்த நிலையில் 2000 ஆம் ஆண்டில் கோமின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதன்பிறகு, கோமின் வாழக்கைக்கு உறுதுணையாக இருந்து ஆக்டன் உதவி புரிந்துள்ளார்.

பின்னர், 2007 ஆம் ஆண்டு இருவரும் யாஹு நிறுவனத்திலிருந்து விலகினர். ஒரு வருடம் எந்த வேலையும் செய்யாமல் ரிலாஸ்க் செய்துக்கொண்டனர். பேஸ்புக் நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்தனர், இருவரது விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.

அதன்பிறகு 2009 ஆம் ஆண்டு ஆக்டனும், கோமும் வாட்ஸ் ஆப் நிறுவனத்தை நிறுவினர். மிக எளிமையாக பயன்படுத்தக்கூடிய இந்த மொபைல் அப்ளிகேஷனை உலகம் முழுவதும் 450 மில்லியன் மக்கள் உபயோகித்தனர்.

இதையடுத்து பேஸ்புக் வாட்ஸ் ஆப் நிறுவனத்தை 19 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியதோடு இல்லாமல் ஜான் கோமை பேஸ்புக்கின் இயக்குனர்களுள் ஒருவராக்கியுள்ளது.

பேஸ்புக்குக்கு தனது நிறுவனத்தை விற்பது தொடர்பான ஒப்பந்தத்தில் தானும் தனது தாயும் சிறு வயதில் வறுமையுடன் வாழ்ந்து வந்த இடத்தில் வைத்துதான் கோம் கையெழுத்திட்டுள்ளார் எனவும், அந்த இடத்தில்தான் தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனமும் இயங்கி வருகிறது எனவும் போர்பஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment