Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 24 February 2014

கர்ப்பகாலத்தில் பெண்ணின் குருதியின் அளவு குறையும்போது ஏற்படும் விளைவுகள்!

குழந்தை பாக்கியம் தாமதமடையும் ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைவாக இருப்பது முக்கிய காரணமாக அமைந்துவருகிறது. இவ்வாறு விந்து எண்ணிக்கையை கூட்டுவதற்கு ஆண்களின் விதைகளின் நாளங்கள் வீக்கமடைந்திருப்பது காரணம் என அதனை சீர்செய்வதற்கு விதைகளில் பலவித சத்திர சிகிச்சைகள் செய்யப்படுகின்றது. இவ்வாறு விதைகளில் ஏற்படும் Varicocele சத்திரசிகிச்சைகள் செய்வதன் மூலம் விந்துக்களின் எண்ணிக்கையை கூட்ட முடியுமா?

ஆண்களில் விதைகளில் ஏற்படும் Varicocele விந்துகளின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் என கருதி அதனை சீர்செய்ய சத்திரசிகிச்சைகள் கூடுதலாக இந்தியாவில் செய்யப்பட்டுவருகின்றது.

ஆனால் சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சிகளின் முடிவாக இவ்வாறு சத்திரசிகிச்சைகள் விதைகளில் செய்வதன் மூலம் விந்துகளின் எண்ணிக்கையை கூட்ட முடியாது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இவ்வாறு Varicocele சத்திரசிகிச்சைகள் செய்வதற்கு முன்னர் இதனால் நன்மை உண்டா மற்றும் விந்துக்களின் எண்ணிக்கை கூடுமா என விரிவாக ஆராய்ந்த பின்னர் சத்திர சிகிச்சைக்கு சம்மதிக்க வேண்டும்.

ஏனெனில் பல ஆண்கள் இவ்வாறு இந்தியா சென்ற இடத்தில் இவ்வகை சத்திர சிகிச்சைகள் செய்யப்பட்டு எவ்வித பலனும் இல்லாமல் இருக்கிறார்கள்.

கேள்வி: கர்ப்பிணி பெண்கள் சிலரில் குருதியின் அளவு குறைவாக இருப்பதாக கூறுகிறார்கள். இவ்வாறு கர்ப்பிணி பெண்களின் குருதியின் அளவு குறைவாக உள்ள போது இதனை எவ்வாறு அதிகரிக்க முடியும்?

பதில்: கர்ப்பிணி பெண்களின் குருதியின் அளவு HB மூலம் அறியப்படும். HBஇன் அளவு 11இற்கும் குறைவாக இருப்பின் கர்ப்பிணி பெண்களில் குருதியின் அளவு குறைவு என முடிவு செய்யப்படும்.

இவ்வாறு குறைவடைந்த குருதியினால் சிசு வளர்ச்­சிக்கு ஆபத்துகள் வந்துவிடும். ஆகையால் தாயில் குருதியின் அளவை அதிகரிக்க சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும்.

அதாவது இரும்புச் சத்து கொண்ட விற்றமின் மாத்திரைகள் போலிக் அசிட்டுடன் சேர்த்து ஒழுங்காக தினமும் எடுக்க வேண்டும்.

அத்துடன் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளாக கீரை வகைகள், பச்சை மரக்கறிகள், மீன் வகைகள் என்பன சேர்க்கப்பட வேண்டும். அத்துடன் பூச்சி மருந்தைக் கூட கர்ப்பிணி பெண் எடுக்க வேண்டும். சிலவேளைகளில் வயிற்றில் இருக்கும் பூச்சி குருதியை குடிப்பதால் குருதியின் அளவு குறைவடைய முடியும். எனவே, பூச்சிமருந்தை எடுத்து இவ்வகை பூச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் தாயின் குருதியை கூட்ட முடியும்.

கேள்வி: கர்ப்பகாலத்தில் கணவன் - மனைவி தாம்பத்திய உறவை மேற்கொள்வது ஆபத்தானதா இதனால் பின் விளைவுகள் ஏற்படுமா?

பதில்: கர்ப்பகாலத்தின் போது கணவன் - மனைவி தாம்பத்திய உறவில் ஈடுபடுவதில் எவ்வித ஆபத்துகளுமில்லை. அதாவது ஆரம்ப கர்ப்பகாலத்திலிருந்து இறுதிக் கர்ப்பகாலம் வரைக்கும் எவ்வித தடைகளுமில்லை. ஆனால் கர்ப்பகாலத்தில் குருதிக்கசிவு ஏதும் ஏற்பட்டால், அல்லது தொப்புள் நச்சுக்கொடி (Placenta) கர்ப்பப்பையின் வாயை மூடி வளர்ந்திருந்தால், அல்லது தண்ணீர்க்குடம் (Water Bag) உடைந்து நீர் வெளியேற்றம் இருந்தால், தாம்பத்திய உறவைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் இறுதிக் கர்ப்பகாலத்தில், அதாவது பிரசவ திகதியை அண்மித்த காலப்பகுதியில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது பிரசவவலியை ஆரம்பிப்பதற்கு உதவும் என்பதும் உண்மையாகும். கர்ப்பகாலத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது பெண்ணின் வயிற்றில் பாரத்தை அல்லது கூடிய தாக்கத்தினை ஏற்படுத்தாது பெண் மேலேயும் ஆண் கீழேயும் உள்ள நிலையில் உறவை மேற்கொள்வது ஆரோக்கியமானதாகும்.

கேள்வி: எனது வயது 64. ஐந்து பிள்ளைகளின் தாய் எனக்கு 50 வயதில் கட்டி காரணமாக கர்ப்பப்பை அகற்றப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது கடந்த ஆறு மாதங்களாக எனக்கு யோனிவாசல் வழியாக குடல் இறக்கம் போன்று ஏற்படுகிறது.

இதனால் எனக்கு அசெளகரியமாக உள்ளது. இவ்வாறு ஏற்கனவே கர்ப்பப்பை அகற்றப்பட்ட எனக்கு எவ்வாறு மீண்டும் யோனிவாசல் வழியாக குடல் இறக்கம் ஏற்படும்? இதற்கு என்ன சிகிச்சை செய்ய வேண்டும்?

பதில்: கர்ப்பப்பை ஏற்கனவே அகற்றப்பட்டவர்களில் சில காலங்களுக்கு பின்னர் சிலரில் கர்ப்பப்பை இறக்கம் போன்று குடல் இறக்கம் யோனிவாசல் வழியாக ஏற்படும். இதனை Vault Prolapse என்பார்கள்.

இதன்போது யோனிவாசல்தான் குடல் இறக்கம் போன்று இறங்கி வெளியே தள்ளப்பட்டு காணப்படும்.

இதனை மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியாது. ஆனால் இதற்கென சத்திர சிகிச்சைகள் உள்ளது. இதன்மூலம் இந்தப் பிரச்சினையை எளிதாக குணப்படுத்த முடியும்.

0 comments:

Post a Comment