Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 24 February 2014

கமல், சூர்யா, அப்புறம் விஜய் சேதுபதி!

கோடம்பாக்கத்தில் எந்த சினிமா விழா நடந்தாலும் சம்பந்தப்பட்ட படத்தின் ஹீரோ வருகிறாரோ இல்லையோ விஜய் சேதுபதி டாணென்று ஆஜராகிவிடுவார். ஏம்பா அரைடஜன் படங்கள்ல நடிக்கிறார்னு சொல்றாங்க. எங்க மீட்டிங் போட்டாலும் வந்திடுறாரே என்று பிரஸ் பீப்பிளே பிகில் ஆவதுண்டு. அவரைப் போலவே ஆல்டைம் மேடையில் இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார் இதனை கவனிக்காமல் இருப்பாரா?


இந்திப் படவுலகில் ஒரு படம் வெளியாகிறது என்றால் அதில் நடித்தவர்கள் வாரக்கணக்கில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். அப்படியே தமிழ்நாடுக்கு வந்தால் ஹீரோயினே படத்தின் ஆடியோ பங்ஷனுக்கு ஆப்சென்டாகதான் இருப்பார். கேட்டால் அதுக்கு தனி கமிஷன் வெட்டணும் என்று பதில்வரும்.


இப்படிப்பட்டவர்களின் வாலை ஒட்ட நறுக்க சமீபத்தில்தான் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதவர்களின் சம்பளத்தில் கை வைப்பது என்ற முடிவை கேயார் எடுத்தார். அதேநேரம் எந்த சின்ன பங்ஷன் என்றாலும் முறையாக அழைப்பு விடுத்தால் கமல் ஆஜராகிவிடுவார். இதனை சமீபத்தில் நடந்த விழாவில் குறிப்பிட்ட கேயார், கமல் இளம் நடிகர்களை உற்சாகப்படுத்துவதில் முன்னிலையில் இருக்கிறார்.


அவர் வருவதால் அந்தப் படத்துக்கு கிடைக்கும் பப்ளிசிட்டி கொஞ்சமில்லை. அதேபோல் சூர்யாவும் விழாக்களில் கலந்து கொள்கிறார். அவர்கள் வரிசையில் இப்போது விஜய் சேதுபதியும் கூப்பிடுகிற விழாக்களில் தவறாமல் கலந்து கொள்கிறார், அவருக்கு என்னுடைய பாராட்டுகள் என தெரிவித்தார்.

நாமும் பாராட்டுவோம்.

0 comments:

Post a Comment