Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 24 February 2014

இதுதானா பழம் நழுவி பாலில் விழுவது...?

அமலா பால் ரொம்ப அலட்டல் பண்றார் என்று திரையுலகு குற்றப்பத்திரிகை வாசித்தவேளை நிமிர்ந்து நில் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்தார் சமுத்திரக்கனி. அமலா பாலைப் போல ஒத்துழைப்பு தரும் நல்ல நடிகையை நான் கண்டதில்லை என சான்றிதழும் தந்தார்.


நிமிர்ந்து நில் ஒரே நேரத்தில் இரு மொழிகளில் - தமிழ், தெலுங்கு - தயாரானது. தமிழில் ஜெயம் ரவியுடன் நடித்த காட்சியை உடனேயே நானியுடன் அமலா பால் நடிக்க வேண்டும்.


இருமொழிகளிலும் ஹீரோக்கள்தான் வேறு. நாயகி ஒருவரே, அமலா பால். இப்படி ஒரே நேரத்தில் இருமொழி பேசி இரண்டுமுறை நடிப்பது சாதாரணமில்லை. சமுத்திரக்கனி அமலா பாலை பாராட்டியது இதனால்தான்.


முன்பே நாம் சொன்னது போல் நிமிர்ந்து நில்லுக்குப் பிறகு சமுத்திரக்கனி தயாரித்து இயக்கும் ஹாரர் படத்தில் அமலா பால் நடிக்கிறார். தற்போது அமலா பாலே அதனை உறுதி செய்துள்ளார்.


கிராமப்புறக் கதையான இதில் மைனாவைவிட பவர்ஃபுல்லான வேடம் எனக்கு. என்னுடைய கரியரில் இது முக்கியமான படமாக அமையும் என கூறியுள்ளார்.


கனி(பழம்) நழுவி பாலில் விழுவது இதுதானோ.

0 comments:

Post a Comment