Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 16 February 2014

வீட்டில் உள்ள தூசிகளை நீக்கும் அலங்கார செடிகள்!!!

தற்போது அனைவரும் பெரிய பெரிய அடுக்குமாடி கட்டிடங்களில் வாழ்ந்து வருகிறோம். இதனால் வீட்டைச் சுற்றி அழகான தோட்டம் அமைக்க முடியாமல் போகிறது. ஆகவே பலர் வீட்டின் உள்ளே வளர்க்கக்கூடிய சில செடிகளை வளர்க்கின்றனர். பொதுவாக சாதாரண செடிகளுக்கு சூரிய வெளிச்சம் மற்றும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. ஒருவேளை அத்தகையவை முறையாக கிடைக்காவிட்டால், செடிகள் வாடிவிடும். இப்படி சாதாரண செடிகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளதே, அப்படியெனில் வீட்டின் உள்ளே சூரிய வெளிச்சம் இல்லாமல் வளரக்கூடிய செடிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

மேலும் வீட்டின் உள்ளே செடிகளை வளர்த்தால், ஒரு நன்மை உள்ளது. அது என்னவென்றால், வீட்டின் உள்ளே செடிகளை வளர்த்தால், வீட்டில் தூசிகள் இல்லாமல் இருக்கும். ஏனெனில் வீட்டில் இருக்கும் தூசிகள் அனைத்தையும் செடிகள் உறிஞ்சிவிடும். அதுமட்டுமல்லாமல், இத்தகைய செயலை அனைத்து செடிகளும் முறையாக செய்யும் என்று சொல்ல முடியாது. ஆனால் வீட்டில் தூசிகள் படிவதை தடுக்கும் படியான சில செடிகள் உள்ளன. மேலும் இத்தகைய செடிகள், வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு எந்த ஒரு ஆபத்தையும் ஏற்படுத்தாதவாறு இருக்கும்.

இப்போது வீட்டில் தூசிகள் படியாமல், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளும் சில செடிகளைப் பார்ப்போமா!!!


ஸ்பைடர் பிளாண்ட் (Spider Plant)

வீட்டில் உள்ள மாசுக்களை சுத்தமாக வெளியேற்றும் செடிகளில் முக்கியமானது ஸ்பைடர் பிளாண்ட் ஆகும். இந்த செடி தூசிகளை மட்டும் போக்குவதோடு, வீட்டிற்கு அழகையும் கொடுக்கும்.

ஃபேர்ன்ஸ் (Ferns)

இந்த செடியின் இலைகள் மிகவும் அழகாக ப்ரில் போன்று காணப்படும். அதிலும் பாஸ்டன் ஃபேர்ன் செடி, வீட்டில் ஈரப்பதத்தை வெளியேற்றி, தூசிகளை நீக்கும். மேலும் இது பார்ப்பதற்கு ப்ளாஸ்டிக் இலை போன்று க்யூட்டாக இருக்கும்.

ஐவி (Ivy)

இது ஒருவகையான படர்க்கொடி. இந்த கொடியும் வீட்டில் வளர்க்கக்கூடிய உள் அலங்கார செடிகளில் மிகவும் பிரபலமானது. அதிலும் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள், வீட்டில் இதனை வளர்ப்பது நல்லது.

கமுகு மரம் (Areca Palm)

இந்த செடியின் இலைகள் பார்ப்பதற்கு தென்னை மரத்தின் இலைகளைப் போன்று காணப்படும். ஆனால் இந்த செடியை வீட்டின் உள்ளே வளர்த்தால், வீட்டில் நல்ல குளிர்ச்சியான காற்று வீசுவதோடு, தூசிகளும் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும்.

கோல்டன் போதோஸ் (Golden Pothos)

இந்த செடியை டெவில் ஐவி என்றும் சொல்வார்கள். இந்த செடியானது வீட்டில் உள்ள ஃபார்மால்டிஹைடு, பென்சைன் மற்றும் சைலின் போன்ற தூசிகளை முற்றிலும் வெளியேற்றி, வீட்டை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.


கற்றாழை

பெரும்பாலான வீடுகளில், வீட்டின் உள்ளே வளர்க்கப்படும் செடிகளில் கற்றாழையும் ஒன்று. நிறைய பேர் இந்த செடியை ஒரு குழந்தை போன்றும், தெய்வம் போன்றும் நினைத்து பாதுகாப்புடன் வளர்ப்பார்கள். ஆனால் உண்மையில் இந்த செடியை வீட்டின் உள்ளே வளர்த்தால், வீட்டினுள் இருக்கும் அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்.

சைனீஸ் எவர்க்ரீன் (Chinese Evergreen)

இந்த செடியானது வீட்டினுள் வரும் காற்றை சுத்தப்படுத்துவதில் சிறந்தது. மேலும் தற்போது நிறைய பேர், இந்த செடியைத் தான் வீட்டில் வளர்க்கின்றனர்.

ஸ்நேக் பிளாண்ட் (Snake Plant)

உள் அலங்காரச் செடிகளுள் ஸ்நேக் பிளாண்ட் முக்கியமானது. இந்த செடி வீட்டிற்கு அழகை மட்டும் தருவதோடு, வீட்டில் சுத்தமான காற்றினை தருகிறது.

மார்ஜினட்டா (Marginata)

செடி வளர்க்க விரும்புவோர், இந்த செடியின் அழகை விரும்பாமல் இருக்கமாட்டார்கள். இந்த செடியானது அந்த அளவில் அழகாக இருப்பதோடு, அசுத்தக் காற்றினை சுத்தப்படுத்தி வீட்டினுள் நுழையவிடுகிறது. மேலும் வீட்டில் இருக்கும் தூசிகளையும் நீக்குகிறது.

பீஸ் லில்லி (Peace lilly)

வீட்டில் அழகான செடி வளர்க்க ஆசைப்பட்டால், பீஸ் லில்லியை வளர்த்து வாருங்கள். இது அழகுடன், வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.

0 comments:

Post a Comment