Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 16 February 2014

நாடுகளின் வரைபடங்களை ஒப்பிட்டு பார்க்க உதவும் இணையதளம்!

வரைபட சண்டை போட விருப்பமா? என்று கேட்பது போல் இருந்தாலும் மேப்பைட் இணையதளம் உண்மையில் செய்வது நாடுகளின் வரைபடங்களை ஒப்பட்டு பார்ப்பதை ! அதாவது எந்த இரண்டு நாடுகளையும் அவற்றின் வரைபடங்கள் வாயிலாக இந்த தளத்தில் ஒப்பிட்டு பார்க்கலாம்.

இதற்காக இரண்டு கட்டங்கள் இருக்கின்றன. இரண்டு கட்டங்களில்ம் வரிசையாக நாடுகளின் பட்டியல் இருக்கின்றன. நீங்கள் ஒப்பிட்டு பார்க்க விரும்பும் நாடுகளை இவற்றில் தேர்வு செய்து கொண்டு ஒப்பிடுக எனும் கட்டளையை கிளிக் செய்தால் அந்த இரண்டு நாடுகளின் ஒப்பீட்டு தோற்றம் தோன்றும். இந்த தோற்றத்தில் இரு நாடுகளின் வரைபடங்களும் ஒன்றன் மீது ஒன்று பொறுத்தப்பட்டிருக்கும். இந்த படத்தை பார்க்கும் போதே ஒரு நாடு மற்றொரு நாட்டை விட எந்த அளவு பெரியது அல்லது சிறியது என தெரிந்து கொள்ளலாம்.

எந்த அளவு பெரியது என்பதை எண்ணிக்கையாகவும் மேலே கொடுக்கப்படுகிறது. உதார்ணத்திற்கு இந்தியாவையும் லத்வியாவயும் ஒப்பிட்டால் , லத்வியாவை விட இந்தியா 50,92 மடங்கு பெரியது என்ற தகவல் தரப்படுகிறது. வரைபடத்தின் பார்த்தால் லத்வியா இந்தியாவுக்கு ஒரு குட்டி மாநிலம் போல அடங்கி விடுகிறது. இரு நாடுக்ளின் பரப்பளவும் கொடுக்கப்பட்டுள்ளது. லத்வியா (64559 km² . இந்தியா
3287263 km² . லத்வியா பற்றி மேலும் தகவல் தேவை என்றால் அந்நாட்டின் பெயர் மீது கிளிக் செய்தால் விக்கிபீடியா பக்கத்துக்கு அழைத்து செல்லப்படுகிறது. இந்தியா பற்றியும் இவ்விதமே அறியலாம்.

இப்படியாக பல நாடுகளை ஒப்பிட்டு பார்க்கலாம். இது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு போல இருக்கும். ஆனா. வெறும் விளையாட்டு அல்ல. பல நேரங்களில் இந்த ஒப்பீடு புரிதலுக்கு உதவும்.

உதாரனத்துக்கு ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் இந்தியாவை விட பெயர் தெரியாத சிறிய நாடெல்லாம் தங்கம் வாங்குகிறது என நாம் புலம்புவதுண்டு அல்லவா? இது போன்ற நேரங்களில் அந்த நாடுகளில் எவ்வளவு சிறியவை என்று தெரிந்து கொள்ளலாம். ஒலிம்பிக் பற்றி கட்டுரை எழுதும் போது இந்த விவரம் மற்றும் வரைபட உதாரனம் உதவியாக இருக்கும்.

இது போலவே எந்த ஒப்பீட்டுக்கும் இந்த வரைட சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இரு நாடுகளின் வளர்ச்சி , குற்றங்களின் பெருக்கம் போன்ற விஷய்ங்கள் குறித்து பேசும் போது இவ்வாறு அவற்றைன் பரப்பை ஒப்ப்ட்டி பார்ப்பது புரிதலை மேம்படுத்தும். பொதுவாக இது போன்ற ஒப்பீட்டை உருவாக்க புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு மெனக்கெட வேண்டும். ஆனால் இந்த தளம் அதை சுலமாக்கி தருகிறது. வலைப்பதிவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி : http://mapfight.appspot.com/

0 comments:

Post a Comment