Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 16 February 2014

‘வெண்மேகம்’ படத்தின் எக்ஸ்க்ளுசிவ் தகவல்!


இரட்டை சகோதரர்கள் ராம் மற்றும் லட்சுமணன் இயக்கிய ‘வெண்மேகம்’ திரைப்படம் வருகிற 21–ந் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது. வெண்மேகம் படம் குறித்து இயக்குனர்கள் ராம் – லட்சுமணன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:–


வெண்மேகம் படம் குடும்பபாங்கான, காமெடி மற்றும் திரில்லர் ஆக்ஷன் நிறைந்த சினிமா ஆகும். இந்த படம் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பிடிக்கும். இந்த படத்தில் மைனா பட விதார்த் கதாநாயகனாகவும், பிரபல மாடல் அழகி இஷாரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பள்ளி மாணவியான ஜெயஸ்ரீ சிவதாஸ், முன்னணி காமெடி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தில் தாய் – மகளுக்கு இடையேயான உறவை ஆழமாக வெளிப்படுத்தி உள்ளோம்.


படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மிகபிரமாண்டமாக வெளிவந்துள்ளன. படத்தில் கோவை தனபால் எழுதியுள்ள பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. படத்தின் முடிவில் படத்திற்கு வெண்மேகம் என ஏன் பெயர் வைத்துள்ளோம் என்பதை ரசிகர்களே தெரிந்து கொள்வார்கள். பேட்டியின் போது ஏ.பி.சாமி, ஏ.பி.செவ்வேள் ஆகியோர் உடனிருந்தனர்.

0 comments:

Post a Comment