Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, 15 February 2014

அமைதியாக சாதித்த மோகன்... பிலிம் நியூஸ் ஆனந்தன் சிறப்பு பேட்டி!


முக்தா சீனிவாசனின் சகோதரர் வி.ராமசாமி, 1982ல் தயாரித்த படம் ‘பரீட்சைக்கு நேரமாச்சு’. மேடை நாடகமான இது படமாக எடுக்கப்பட்டது. கே.சுந்தரம் திரைக்கதை, வசனங்களை எழுதியிருந்தார். முக்தா சீனிவாசன் இயக்கினார். எம்.எஸ்.வியின் இசையில் உருவான படம். சிவாஜி, சுஜாதா, பூர்ணிமா, மனோரமா நடித்தனர். நாடகத்தில் நடித்த ஒய்.ஜி.மகேந்திரன், அதே வேடத்தில் குணச்சித்திர பாத்திரத்தில் நடித்தார். அவருக்கு படத்தில் டபுள் ரோல்

526 நாட்கள் ஓடி சாதனை படைத்த படம், ‘பயணங்கள் முடிவதில்லை’. மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவைதம்பி தயாரித்தார். கதையும் அவரே. திரைக்கதை, வசனங்கள் எழுதி ஆர்.சுந்தர்ராஜன் இயக்கினார். இளையராஜாவின் இசை, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மோகன், பூர்ணிமா, எஸ்.வி.சேகர், நாகேஷ், கவுண்டமணி நடித்தனர். கமல், ரஜினி திரையுலகில் ஆர்ப்பாட்டத்துடன் வெற்றிகளை தந்து கொண்டிருந்த நேரம் அது. காதல் கதை, மெலடி இசை ஆக¤யவற்றை பக்க பலமாக கொண்டு அமைதியாக வெற்றிகளை பதிவு செய்து கொண்டிருந்தார் மோகன். அவரது வளர்ச்சியும் அமைதியாகவே இருந்தது. ‘பயணங்கள் முடிவதில்லை’ படம், அவரது கேரியரில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மோகன் படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு விநியோகஸ்தர்கள் அப்படத்தை வாங்கிச் செல்லும் நிலையை உருவாக்கிவிட்டார்.

பாக்யராஜின் வித்தியாசமான கதை அமைப்பில் உருவானது ‘பொய்சாட்சி’. பாக்யராஜ், சுமித்ரா, ராதிகா நடித்தனர். ராமகிருஷ்ணன் இயக்கினார். ஆனால், அவரது இயக்கத்தில் பாக்யராஜுக்கு திருப்தி இல்லை. படம் வெளிவரும் நேரத்தில் இது தொடர்பாக பெரிய பிரச்னை ஏற்பட்டது. படத்தில் டைரக்டர் பெயர் நீக்கப்பட்டது. ‘சூட்டலு உன்னாறு ஜாக்ரதா’ தெலுங்கு படத்தின் தமிழாக்கம் போக்கிரிராஜா. ஏவிஎம் தயாரித்தது. 180 நாட்கள் ஓடியது. பாலய்யாவின் கதைக்கு பஞ்சு அருணாசலம் திரைக்கதை, வசனங்களை எழுதினர். எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். எம்.எஸ்.வி இசை. ரஜினிக்கு இரட்டை வேடம். ஸ்ரீதேவி, ராதிகா, மனோரமா, முத்துராமன், ஒய்.ஜி.மகேந்திரன், அசோகன் நடித்தனர்.

கவிதாலயாவின் ‘புதுக்கவிதை’ படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். கன்னட படத¢தின் ரீமேக்தான் இந்த படம். ரஜினி, தேங்காய் சீனிவாசன் நடித்தனர். இளையராஜா இசையமைத்தார். 100 நாட்கள் ஓடியது. தெலுங்கில் ‘டைகர் ரஜினி’ என டப¢ செய்யப்பட்டது. ஏவிஎம்மின் மற்றொரு வெற்றிப் படம் ‘சகலகலா வல்லவன்’. கமல்ஹாசன் டபுள் ரோலில் நடித்து செம ஹிட்டான படம். குமரன், சரவணன், பாலசுப்ரமணியம் இணைந்து தயாரித்தனர். ரஜினி கேங்கை சேர்ந்த எஸ்.பி.முத்துராமன், கமலுடன் கூட்டண¤ அமைத்து இந்த மெகா ஹிட் படம் தந்தார். பஞ்சு அருணாசலம் கதை மற்றும் வசனங்களை எழுதியிருந்தார். ‘பல்லடுரு சிம்மம்’ என தெலுங்கிலும், ‘வசந்தோம் சவம்’ என மலையாளத்திலும் டப் ஆன படம். இளையராஜாவின் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. கமலுடன் அம்பிகா, சில்க் ஸ்மிதா, தேங்காய் சீனிவாசன், விகேஆர் நடித்தனர்.

முக்தா பிலிம்ஸ் நிறுவனத்துக்காக வி.ராமசாமி தயாரித்த படம் ‘சிம்லா ஸ்பெஷல்’. முக்தா சீனிவாசன் இயக்கினார். கதை, திரைக்கதை, வசனங்களை விசு எழுதியிருந்தார். எம்.எஸ்.வி. இசையமைத்தார். கமல், ஸ்ரீபிரியா, எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோரமா, புஷ்பலதா நடித்தனர். Ôசினேகாபிஷேகம்Õ என இந்தப் படம், தெலுங்கில் மொழிமாற்றமானது. தமிழில் ராமநாயுடு தயாரித்த படம் ‘தனிக்காட்டு ராஜா’. கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி வி.சி.குகநாதன் இயக்கினார். வாலியின் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்தார். ரஜினியுடன் ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா, ஜெய்சங்கர், விஜயகுமார், ராஜேஷ் நடித்தனர். ‘கிராம கச்சலு’ என இந்தப் படம், தெலுங்கில் மொழிமாற்றமானது.

0 comments:

Post a Comment