Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 16 March 2014

எத்தனை பேருக்கு தெரியும்??

வேலைக்கு செல்லும் ஆண்கள் மட்டும் அவதி அவதியாய் உணவை உட்கொண்டுவிட்டு செல்லவில்லை, அவர்களை வேலைக்கு கிளப்பிவிடும் தாயோ அல்லது மனைவியோ அதே போல் தான் உணவு உட்கொள்கிறார்கள் அடுக்களையில் நின்றுகொண்டே என்பது எத்தனை ஆண்களுக்கு தெரியும்... ?

என் ஆசை எதையுமே என் தந்தை உடனடியாக நிறைவேற்றுவதில்லை, காலம் தாழ்த்தியே நிறைவேற்றி வைக்கிறார் என்று சொல்லும் எத்தனை பிள்ளைகளுக்கு தெரியும், தன் தந்தை தன்னுடையை ஆசைகளை புதைத்து விட்டுத்தான் நம் ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறார் என்று...?

அசைவ வாடையே ஆகாது இருந்தும் மகனின் ஆசைக்காக அசைவம் எடுத்து சமைத்து தருகிறாள் தன் தாய் என்று எத்தனை பிள்ளைகளுக்கு தெரியும்...?

பிடிக்காத உணவை தந்தை ஊட்டிவிட, தந்தை ஊட்டிவிட்ட ஒரே காரணத்திற்காக அந்த உணவை உண்கிறோம் என்று எத்தனை தந்தைமார்களுக்கு தெரியும்...?

சகோதரரின் கனவு நிறைவேற வேண்டும் என்று தன் கனவை தனக்குள் போட்டு புதைத்துக்கொள்ளும் சகோதரிகளின் கனவு எத்தனை சகோதரர்களுக்குத் தெரியும்...?

தங்கையின் திருமனத்திற்காக பணம் சம்பாரிக்க வேண்டும் என்று தன் உறக்கத்தையும்,உணவையும் மறந்து உழைக்கிறார் என்பது எத்தனை தங்கைகளுக்கு தெரியும்...?

தாத்தா பாட்டியிடம் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரிந்து தெரியாது போல் நடிப்பது நாம் அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதை கண்டு ரசிக்கத்தான் என்பது எத்தனை பேரப்பிள்ளைகளுக்கு தெரியும்...?

இவை அனைத்தும் தெரியாமல் இருக்கும் வரைதான் வாழ்க்கை இன்மைபாக இருக்கிறது. அனைத்தும் அனைவருக்கும் தெரிந்துவிட்டால் நமக்காக மற்றவர்கள் இழந்ததை எண்ணி வாழ்நாள் முழுக்க வருந்திக்கொண்டே இருக்க வேண்டியதுதான்..

0 comments:

Post a Comment