நீங்கள் 1 எண்ணில் பிறந்தவர்களா?
நீங்கள் 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் உங்களுக்குரிய எண் 1. ஒன்றாம் எண் என்றாலே மிகவும் மகிழ்ச்சிதான். ஒரு மாணவர் முதல் இடம் பெறுகிறார் என்றால் அவர் மட்டுமின்றி ஆசிரியர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த எண்ணுக்கு அதிபதி சூரியன். ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களின் இயல்புகளைத் தெரிந்துகொள்வோமா?பழகுவதற்கு இனிமையான சுபாவம், பார்வையில் மிடுக்கு, தன்னம்பிக்கை, எதையும் சாதிக்கும் வல்லமை, பிறரை வேலை வாங்குவதில் திறமை, மனித நேயம், எதையும் எதிர்பார்த்துப் பழகாத தன்மை போன்ற எத்தனையோ அனுகூலங்கள்.
தன் துன்பங்களை இவர்கள் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். கடின உழைப்பு, கண்டிப்பான நடத்தை, சிறந்த ஆலோசனை, துன்பங்களைக் கண்டு துவளாமை, தோல்விகளை வெற்றிகளாக்கும் தன்மை, கண்டுபிடிப்புத் திறமை, வான்வெளி ஆய்வுத் திறமை, நேர்த்தியான ஆடைத் தெரிவு போன்ற குணாதிசயங்களால் பிறரால் கவரப்படுவர். பிறர் மகிழ்ச்சியில் இவர்கள் மகிழ்வர். புகழுக்கு அடிபணிவர்.
நீதியும், நேர்மையும் இவர்களது தோழர்கள். சோம்பேறித்தனமும பொறாமையும் இவர்களின் எதிரிகள். வாழ்வில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு அரணாக விளங்குவர். குறுக்குவழி வரவுகளை துச்சமாக மதிப்பர். நேர்மையான போக்கினால் பலரது எதிர்ப்புகளையும் சம்பாதிப்பர். இரக்க குணம் உடையவர். வாக்குறுதிகளைக் கண்ணும் கருத்துமாக நிறைவேற்றுவர். கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்குவர். அயல்நாடுகள், மலையும், மலைசார்ந்த இடங்களில் வசிப்பதும் பகல் பொழுதும், இவர்களுக்கு கரும்பாக இனிக்கும். பிறர் சொத்துக்கு சிறிதும் ஆசைப்படமாட்டார்கள். மனசாட்சிக்குப் புறம்பாக நடக்க மாட்டார்கள். இவர்களை மதிப்புக் குறைவாக நடத்துவோரை ஓரம் கட்டிவிடுவார்கள். எதிரிகளை மன்னிக்கும் பாங்கு உண்டு. கண், வயிறு, தலை சம்பந்தமான சிறிய உபாதைகள் ஏற்படும்.
மொத்தத்தில், புகழ் விரும்பிகளானாலும் நீதியும் நேர்மையும் கொண்ட, பழகுவதற்கு இனிமையானவர்கள்.
0 comments:
Post a Comment