விதைக்கப்படும் தூக்குக்கயிறுகள்...
சாக்கடைகள், கழிவுநீர்ப் பாதைகள், கொல்லைப்புறத் தோட்டம், கிணற்று மேடு என நீர் ஓடும் இடங்களில் எல்லாம் இன்று நம்மால் தூக்கி எறியப்படுகிற சாதாரணக் கடிகார பேட்டரிகள்….. ஒரு பயங்கரமான உயிர்க்கொல்லி என்பது நம்மில் பலருக்கு இன்னும் தெரியாது.
தூர் அடைந்து, துருப்பிடித்துத், துகிலுரிந்த நிலையில் இந்நேரம் அவைகள் எலும்புக் கூடாகியிருக்கும். அந்த மின்கலத்திலுள்ள பொட்டாசியம் ஹைட்ராக்ஸட் எளிதில் நீருடன் சேர்ந்து மின்கலனை அரித்து, உள்ளிருக்கும் பாதரசப் பயில்வானை மண்ணில் கலந்துவிடுகிறது.
பாதரசம் என்பது மூளை நரம்புகளைப் பாதிக்கும் ஒரு வேதிப்பொருளாகும், இது எளிதில் காற்றில் அல்லது நீரில் கலந்து மனித உடலுக்குள் சென்று, மனப்பிறழ்ச்சி, கோமா, தற்கொலையுணர்வு எனப் பலவிதமான உபாதைகளை ஏற்படுத்துக்கூடிய வல்லமை பெற்றது.
இதற்குக் காரணம் யார்?
பாதரசமற்ற கலங்களைத் தயாரிக்காத நிறுவனமா?
அதைத் தரநிர்ணயம் செய்ய அலட்சியம் காட்டுகிற அரசுகளா?
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாத உள்ளாட்சி அமைப்புகளா?
அல்லது இதை அறியாமல் இன்னமும் குப்பையில் வீசிக்கொண்டிருக்கிற நாமா?
பதில் எதுவாக இருப்பினும்…… பலியாகப் போவது நமது சந்ததிகள்தான்.
0 comments:
Post a Comment