இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகஅழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கறுப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே. இவ்வாறு கறுப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது.
அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கறுப்பாக இருக்கும். சிலர் திடீரென்று கறுப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும். அதுமட்டுமல்லாமல் இத்தகைய செல்களின் சுரப்புத்தன்மையை குறைவு படுத்த பல கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள் இருந்தாலும், வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து செய்தால், சருமமானது அழகோடு இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
1. வெண்ணெய் பழத்தில் இருக்கும் ஃபேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின் ஈ, நிறமி செல்லான மெலனின் அளவை கட்டுப்படுத்தும்.அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்பழ (Avocado) பேஸ்ட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பாலை ஊற்றி நன்கு கலந்து, முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் முகத்தில் அளவுக்கதிகமாக இருக்கும் மெலனின் அளவு குறையும். முகமும் அழகாக, பொலிவோடு இருக்கும்.
2. பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அதனை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பானது மறையும்.
3. பால் 2-3 டேபிள் ஸ்பூன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தில் குளிர்ந்த நீரில் அலசி வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும். இது மிகவும் சிறந்த இயற்கையான வழியும் கூட...
4. சந்தன பவுடர் நல்லதொரு சரும பராமரிப்பிற்கு ஏற்ற சிறந்த பொருள். அதனை தண்ணீரில் குழைத்து, கருமை அதிகமாக இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள், அத்துடன் பால் மற்றும் சிறிதளவு தேனை கலந்து தடவி, 10-15 நிமிடம் ஊறச் செய்யுங்கள். அதனை நாள்தோறும் செய்து வந்தால், நாளடைவில் நிறமி செல்களான மெலனின் அளவு குறைந்துவிடும்.
5. கோக்கோ வெண்ணெய் ஒரு நல்ல மாஸ்சுரைசர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருள். அது விரைவில் மெலனின் அளவை சரிசெய்யும். மேலும் எந்த இடம் அதிகமான அளவு கறுப்பாக உள்ளதோ, அந்த இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன் இரத்த ஓட்டத்தின் அளவும் அதிகரிக்கும். மேலும் இது செல்கள் பாதிப்படையாமல் காத்துக் கொள்ளும். இந்த முறை உடலுக்கு விரைவில் நல்ல நிறத்தைக் கொடுக்கும். மேற்கூறியவாறெல்லாம் செய்தால் உடலில் அதிகமாக இருக்கும் மெலனின் அளவு குறைவதோடு, முகமும் அழகாக புதுப்பொலிவோடு காணப்படும்.

0 comments:
Post a Comment